Vijay Sethupathi : ‘ஏஸ்’ படம் வந்ததே பலருக்கு தெரியல.. நடிகர் விஜய் சேதுபதி வருத்தம்!

Ace Movie : நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஏஸ். இந்த படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி மற்றும் பிரபல நடிகை ருக்மினியின் நடிப்பில் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி படம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi : ஏஸ் படம் வந்ததே பலருக்கு தெரியல.. நடிகர் விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகர் விஜய் சேதுபதி

Published: 

24 May 2025 18:16 PM

கோலிவுட் சினிமாவில் கடந்த 2025, மே 23ம் தேதியில் வெளியான திரைப்படம் ஏஸ் (Ace). இந்த படத்தில் தமிழ் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) அதிரடி நாயகனாக நடித்திருந்தார். முற்றிலும் ஆக்ஷ்ன், நகைச்சுவை மற்றும் க்ரைம் த்ரில்லர் போன்ற கதைக்களத்துடன் இந்த படமானது வெளியாகியிருந்தது. விஜய் சேதுபதியின் இந்த ஏஸ் படத்தில் அவருக்கு ஜோடியாகப் பிரபல கன்னட நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இவர் கன்னட படங்களில் நடித்துப் பிரபலமாகியுள்ளார். இவர்களின் கூட்டணியில் வெளியான இந்த படத்தினை இயக்குநர் ஆறுமுக குமார் (Arumuga kumar) இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, ஏஸ் படம் ரிலீசானது மக்கள் மத்தியில் தெரியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இவர் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

ஏஸ் பட ரிலீஸ் குறித்து வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி :

நடிகர் விஜய் சேதுபதி அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், எனது ஏஸ் படம் ரிலீசானதே பலருக்கும் தெரியவில்லை, அதற்கு காரணம் நாங்கள்தான் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய விஜய் சேதுபதி, எங்களுக்கு ஒரு சில நெருக்கடியின் காரணமாக இந்த ஏஸ் படத்தை உடனடியாக வெளியிட வேண்டிய சூழ்நிலை அமைந்தது. இதைத் தொடர்ந்து தியேட்டரில் வெளியான படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைக்கும் நல்ல விமர்சனங்கள் எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நடிகர்கள் கமல்ஹாசன்,  சிலம்பரசன் போன்ற பெரிய நடிகர்களின் தக் லைஃப் படத்திற்கே சுமார் 25 நாட்கள் ப்ரோமோஷன் செய்யவே தேவைப்படுகிறது என்று நடிகர் விஜய் சேதுபதி அந்த சந்திப்பில் கூறியுள்ளார்.

ஏஸ் படக்குழு வெளியிட எக்ஸ் பதிவு :

நடிகர் விஜய் சேதுபதியின் இந்த படத்தில் நடிகர் யோகி பாபுவும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாகியுள்ளது. மேலும் கடந்த 2025, மே 23ம் தேதியில் வெளியான இந்த படமானது இதுவரை பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ. 1 கோடியைக் கடந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் விடுமுறை நாட்களில் இன்னும் அதிகம் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.