Maargan : விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ – வெளியான புது அப்டேட்!
Vijay Antony Maargan Movie Update : நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் சுமார் 5க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகிவருகிறது. அதில் ஒரு படம்தான் மார்கன். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் குற்றக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்த நிலையில், அதை தொடர்ந்து மோஷன் போஸ்டர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

மார்கன் படம்
கோலிவுட் சினிமாவில் அதிக திரில்லர் படங்களில் நடித்து ஹிட்டானவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் படங்கள் என்றாலே நிச்சயம் செண்டிமெண்ட் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அவ்வாறு பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், நான் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இவரின் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது அதில், விரைவில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் மார்கன் (Maargan). இந்த படத்தினை இயக்குநர் லியோ ஜான் பால் (Leo John Paul) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமானது, குற்ற கதைகளை அடிப்படியாகக் கொண்டு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதியை குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் குறித்தும் விஜய் ஆண்டனி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த மார்கன் படத்தின் மோஷன் போஸ்டர் 2025, மே 21ம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
🪱 Motion Poster of #MAARGAN releasing tomorrow @ 5PM🪱@leojohnpaultw @AJDhishan990 @vijayantonyfilm @mrsvijayantony pic.twitter.com/PzvQqMEmuX
— vijayantony (@vijayantony) May 20, 2025
மார்கன் படத்தின் மூலம் நடிகர் விஜய் ஆண்டனி , தனது சகோதரியின் மகன் அஜய் திஷான் என்பவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் அவர் விஜய் ஆண்டனிக்கு எதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சமுத்திரக்கனி, பிரிகிதா சகா, தீபிஷிகா மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் விஜய் ஆண்டனிதான் இசையமைப்பாளராக இசையமைத்துள்ளார்.
தனது சொந்த ப்ரொடக்ஷ்ன் கம்பெனியில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் மார்கன். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் த்ரில்லர் மற்றும் குற்றம் சார்ந்த கதைக்களத்துடன் அமைந்துள்ள நிலையில், வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த படம் தொடர்பான அப்டேட்டுகளும் டீசர் மற்றும் ட்ரெய்லரும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் புதிய படங்கள் :
நடிகர் விஜய் ஆண்டனி மார்கன் படத்தை தொடர்ந்து கைவசம் 5 படங்களை வைத்துள்ளார். சக்தி திருமகன், லாயர், வள்ளி மயில், காக்கி மற்றும் அக்னி சிறகுகள் என 5 படங்களைத் தனது கைவசம் வைத்திருக்கிறார். இந்த படங்கள் வரும் இந்த 2025 மற்றும் 2026ம் ஆண்டிற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்கன் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.