சூர்யா 45 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்!

Suriyas 45th Movie: நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படத்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 45-வது படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா 45 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்!

சூரியா 45

Updated On: 

08 May 2025 10:48 AM

கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது ரெட்ரோ. சூர்யாவின் நடிப்பில் 44-வது படமாக வெளியான இதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj) இயக்கி உள்ளார். படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காத்திருந்த நிலையில் படம் வெளியானதும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். சமீபத்தில் படத்தில் வசூல் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு ரெட்ரோ படம் 100 கோடி ரூபாயை வசூலில் கடந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தப் படம் வெளியாகி 8 நாட்களை கடந்த நிலையில் படத்தின் வரவேற்பு இன்னும் குறையவில்லை. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

ரெட்ரோ படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம், கருணாகரன், சுவாசிகா என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். லவ், லாஃப்டர், வார் என்று மூன்று பகுதிகளாக இந்தப் படத்தை பிரித்து ஒவ்வொரு காலத்திலும் என்ன நடக்கிறது என்பதைக் காட்டியிருந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா:

ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா இருக்கும் போது இவரது நடிப்பில் உருவாகவுள்ள 45-வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதனபடி நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ரெட்ரோ படத்தின் ஷூட்டிங்கின் போதே சூர்யாவின் 45-வது படத்தின் பணிகளும் தொடங்கி நடைப்பெற்று வந்தாந்து.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்த ஜோடி முன்னதாக இணைந்து நடித்த மௌனம் பேசியதே மற்றும் ஆறு ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 45 படத்தின் நடிகர்கள் யார் யார்?

இந்தப் படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் த்ரிஷா உடன் இணைந்து நடிகர்கள் நட்டி நட்ராஜ், யோகி பாபு, சுவாசிகா, ஷிவதா மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகின்றது. அதன்படி படத்தின் டைட்டில் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.