Soori : மாமன் பட ப்ரீ புக்கிங் ஆரம்பம்.. நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ!
Maaman Movie Ticket Pre-Booking Begins : கோலிவுட் சினிமாவில் பிரபல காமெடியனாக இருந்து முன்னேறி நடிகரானவர் சூரி. இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் மாமன். இந்த படத்தில் முன்னணி ஹீரோவாக நடித்து அசத்தியிருக்கிறார். மாமன் படமானது வரும் 2025, மே 16ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. அது தொடர்பாக நடிகர் சூரி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விமலின் விலங்கு (Vilangu) வெப் தொடரை இயக்கி தமிழில் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prashanth Pandiaraj) . இவரின் இயக்கத்தில் இந்த தொடரைத் தொடர்ந்து உருவாகியுள்ள படம் மாமன் (Maaman). இந்த படத்தில் நடிகர் சூரி (Soori) ஹீரோவாக நடித்துள்ளார். சினிமாவில் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரம் மற்றும் காமெடி போன்ற ரோலில் நடித்து மிகவும் பிரபலமானார். அதை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனால் ஹீரோவாக படங்களில் அறிமுகமானார். இவரின் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான விடுதலை பார்ட் 1 (Viduthalai Part 1) படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கருடன், விடுதலை 2 போன்ற படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் அவரின் ஹீரோவாக நடித்து 5வதாக உருவாகியுள்ள படம் மாமன்.
இந்த படமானது குடும்பம் மற்றும் செண்டிமெண்ட் காதல் போன்ற கதைக்களத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர் பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஷ்தி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்த மாமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படமானது வரும் 2025, மே 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கு ஆதரவு தரும்படி நடிகர் சூரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
The wait is over! Maaman film tickets are now live — grab yours now through the link belowhttps://t.co/iwO04u9Udhhttps://t.co/xDXQzKLPKg#MaamanFromMay16
Directed by @p_santh
A @HeshamAWmusic Musical
Produced by @kumarkarupannan @larkstudios1@AishuL #Swasika #RajKiran… pic.twitter.com/2lUdvFBTZz— Actor Soori (@sooriofficial) May 14, 2025
நடிகர் சூரி இந்த வீடியோவில், மாமன் படத்தின் டிக்கெட் முன் பதிவு தொடங்கியுள்ளதாகவும், படத்திற்கு குடும்பங்கள் ஆதரவு தருமாறு கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
நடிகர் சூரியின் மாமன்படத்தில் அவரின் அக்கா வேடத்தில், லப்பர் பந்து படத்தில் நடித்துப் பிரபலமான நடிகை சுவாசிகா நடித்துள்ளார். இவர் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் பாபா பாஸ்கர் மற்றும் ராஜ்கிரண் போன்ற பலவேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படமானது தாய்மாமன் மற்றும் மருமகனுக்கு உண்டான உறவு பந்தத்தைப் பற்றி இருக்கும் என்று ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.
இந்த படமானது சூரியின் நடிப்பில் வெளியாகும் எமோஷனல் மற்றும் செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் வெளியாக்குவதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் , டிக்கெட் ப்ரீ புக்கிங்கும் தொடங்கியுள்ளது. ரசிகர்கள் பலரும் டிக்கெட் புக்செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.