Sivakarthikeyan: வெங்கட்பிரபு படத்தில் சிவகார்த்திகேயன்?.. ரசிகர்கள் உற்சாகம்!
Sivakarthikeyan New Movie Update : தமிழ் சினிமாவின் நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னணி நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகிவரும் படம் பராசக்தி. இந்த படத்திற்கு முன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அமரனின் வெற்றியைத் தொடர்ந்து பிரபல இயக்குநர்களுடன் படத்தில் இணைந்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக விஜய் பட இயக்குநருடன் புதிய படத்தில் இணையவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

விஜய் மற்றும் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனைத் (Sivakarthikeyan) தமிழ் சினிமாவில் தெரியாத நபர்களே இருக்கமுடியாது என்றே கூறலாம். தனது ஆரம்பக்காலத்தில் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் (Program host) , போட்டியாளர் எனப் பலவற்றில் கலந்துகொண்டு தமிழகத்தில் மூலைமுடுக்கு எங்கும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து சினிமாவின் பக்கம் வந்து, பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் அமரன் (Amaran). இந்த படமானது மறைந்த ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இதைப் பிரபல இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy) இயக்கியிருந்தார். இந்த படமானது எதிர்பாராத வரவேற்பைப் பெற்று, உலகளாவிய வசூலில் ரூ. 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
அதைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸுடன் (A.R. Murugadoss) மதராஸி (Madharasi) மற்றும் சுதா கொங்கராவுடன் பராசக்தி (Parasakthi) போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் மதராஸி படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படங்களைத் தொடர்ந்து, இறுதியாக விஜய்யின் படத்தை இயக்கி வெற்ற பெற்ற இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயனின் கூட்டணி உறுதியா ?
இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இறுதியாக விஜய்யின் கோட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அந்த காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் துப்பாக்கியை வாங்கும் காட்சியானது எதிர்பாராத சர்ப்ரைஸை கொடுத்திருந்தது. அதைத் தொடர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இந்த தகவல்களானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி படக்குழு வெளியிட்ட பதிவு :
தமிழ் தீ பரவட்டும் 🔥#Parasakthi
Tamil Teaser Link 🔗 https://t.co/sCLc8eMkNk
Telugu Teaser Link 🔗 https://t.co/dKLdD2w7JU@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @dop007 @editorsuriya… pic.twitter.com/97oj7E84fy
— DawnPictures (@DawnPicturesOff) January 30, 2025
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தற்போது தீவிரமாகத் தயாராகிவரும் படம் பராசக்தி. சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்தது வருகிறார்.
சிவகார்த்திகேயனின் இந்தப் படத்தில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பல்வேறு பிப்பலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.