Santhanam : என்னோட உண்மையான நண்பன் அவர்தான்.. சந்தானம் சொன்ன பிரபலம்!

Actor Santhanam About True Friend : காமெடியகனாக சினிமாவில் நுழைந்து தற்போது படங்களை ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரின் நடிப்பில் படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அவர் முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில் அவன் உண்மையான நண்பர் யார் என்பதை பற்றிப் பேசியிருந்தார். அதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

Santhanam : என்னோட உண்மையான நண்பன் அவர்தான்.. சந்தானம் சொன்ன பிரபலம்!

நடிகர் சந்தானம்

Updated On: 

03 May 2025 10:40 AM

தமிழில் நடிகர் சிம்புவின் (Simbu) மன்மதன்  (Manmadhan) படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக நுழைந்தவர் சந்தானம் (Santhanam). இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடியனாக நடித்திருக்கிறார். விஜய் முதல் அஜித் வரை பல ஹிட் நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். தொடர்ந்து படங்களை நகைச்சுவை நடிகராகி நடித்தது வந்த இவர், கதாநாயகனாக அறிமுகமான படம் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் (Vallavanukku Pullum Aayudham). இந்த படத்தில் சந்தானம் நடிகராகவும், இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். இந்த படத்தின் மூலமாகத்தான் லீட் ஹீரோவாகி படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது . அதைத் தொடர்ந்தும் அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். இதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் தற்போது இவரின் நடிப்பில் ரிலீசிற்கு தயாராகிவரும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படமானது தோளில் நிறைந்த காமெடி கதைக்களத்துடன் தயாராகியுள்ளது. இந்த படமானது தில்லுக்கு துட்டு என்ற படத்தின் தொகுப்பில் 4வது பாகமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சந்தானம் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் அவரின் உண்மையான நண்பர் யார் என்பதைப் பற்றிப் பேசியிருந்தார். அந்த நபரை வேறு யாருமில்லை நடிகர் ஆர்யாதான். அந்த நிகழ்ச்சியில் சந்தானம் பேசிய விஷயத்தைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

நடிகர் ஆர்யாவைப் பற்றி சந்தானம் பேசிய விஷயம் :

ஆய்ராவின் ப்ரொடக்ஷ்ன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்தானம் “ஆர்யா எனக்கு போன் செய்தார், எங்க இருக்க மச்சான் ஷூட்டிங் இருக்கா என்று கேட்டார். நான் இல்லை வீட்டில் சும்மாதான் இருக்கிறேன் என்று கூறினேன் உடனே என்னை இங்கு வரச்சொல்லிவிட்டார். ஆர்யாவை பற்றிப் பேசவேண்டுமென்றால், நான் ஹீரோவாக படங்களை நடக்க ஆரம்பித்தவுடன் துணை கதாபாத்திரம், ஒரு படத்தில் இரண்டு ஹீரோ கதாபாத்திரம் மற்றும் சிறப்பு ரோல் போன்ற கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள்.

நான் அவர்கள் கூறியதையும் கேட்கவில்லை, நான் எனது போக்கில் தனியாகப் படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தேன், ஆனால் நான் ஆர்யாவிடம் சொன்னது ஒன்றுதான் நீ பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் எடுத்தால் நிச்சயம் அதில் நடிப்பேன் என்று கூறினேன். ஏனென்றால் ஆர்யா என்னுடைய உண்மையான நண்பன் என்று நடிகர் சந்தானம் தெரிவித்திருந்தார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்தானத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு :

சந்தானத்தின் புதிய படம் :

நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமில்லாமல், நடிகர் சிம்புவின் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் பல வருடங்களுக்குப் பின் சிம்புவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.