Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kiss : கவினின் ரொமான்டிக் படமான ‘கிஸ்’ – ரிலீஸ் பற்றி வெளியான அப்டேட்!

Kiss Movie Update : தமிழில் சீரியலில் இருந்து சினிமாவில் கதாநாயகனாக மாறியவர் கவின். இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக பிளடி பெக்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிஸ். தற்போது இந்த படத்தின் ரிலிஸ் பற்றிப் படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

Kiss : கவினின் ரொமான்டிக் படமான ‘கிஸ்’  – ரிலீஸ் பற்றி வெளியான அப்டேட்!
கிஸ் திரைப்படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 14 May 2025 18:01 PM

நடிகர் கவின்  (Kavin)  நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிளடி பெக்கர் (Bloody Beggar). இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar)  தயாரித்திருந்தார். இந்த படமானது அதிரடி காமெடி மற்றும் வித்தியாசமான கதைகளத்துடன் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் கடும் தோல்வியடைந்தது. இந்த படத்தின் தோல்வியைத் தொடர்ந்து அவர் நடித்து வந்த படம் கிஸ் (Kiss) . இதைப் பிரபல நடனக் கலைஞர் சதீஷ் கிருஷ்ணன்  (Sathish Krishnan) இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கவினின் இந்த படமானது கல்லூரி, நடனம் மற்றும் ரொமான்டிக் காதல் படமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி  (Preethi Asrani) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சசிகுமாரின் அயோத்தி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்த இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இந்த ரொமான்டிக் காதல் படமான கிஸ் திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை மாதத்தில் படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் தேதியைப் பற்றிக் குறிப்பிடவில்லை. தற்போது இந்த தகவலானது இணையத்தில் தியாகி பரவி வருகிறது.

கிஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

 

இந்த கிஸ் படத்தின் டைட்டில் வெளியானதில் இருந்தே, மக்களிடையே பேசும் பொருளாகிவிட்டது. இந்த படத்தின் தலைப்பான கிஸ் என்பதை பலரும் கலாய்த்து வந்தனர். ஆனால் இந்த படத்தின் டைட்டிலுக்கு பின்னல் ஒரு கதையே இருக்கிறது. இந்த படத்தின் டைட்டிலை கொடுத்தவரே இயக்குநர் மிஷ்கின்தானாம்.

இந்த படத்தின் கதைக்களமும் ரொமான்டிக் கலந்த காமெடி படமாக இருக்கும் நிலையில், படக்குழு கிஸ் என்ற டைட்டிலுக்காக இயக்குநர் மிஷ்கினை அணுகியுள்ளனர். அவர்தான் இந்த கிஸ் என்ற டைட்டிலை உரிமையை வைத்திருந்தாராம். பின் அவரிடம் இருந்து படக்குழு இந்த படத்தின் டைட்டிலை பெற்றதாக நடிகர் கவின் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

கவினின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே கவினின் டாடா மற்றும் பிளடி பெக்கர் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த கிஸ் படத்தில் இருந்து முதல் பாடல் வெளியானது.

திருடி என்ற அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். அந்த பாடலானது இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இந்த படமானது வரும் 2025, ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில், எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்? மனம் திறந்த ஊர்வசி
ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்? மனம் திறந்த ஊர்வசி...
அட ஆச்சர்யம்.. காரை ஸ்கிட் செய்து இளைஞருக்கு டப் கொடுத்த தாத்தா
அட ஆச்சர்யம்.. காரை ஸ்கிட் செய்து இளைஞருக்கு டப் கொடுத்த தாத்தா...
ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தா..?
ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தா..?...
மதுரையில் தொடங்குகிறதா சூர்யாவின் "வாடிவாசல்" ஷூட்டிங்?
மதுரையில் தொடங்குகிறதா சூர்யாவின்
பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?
பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?...
கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?
கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?...
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்...
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!...
தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்கணும் - விஜய் தேவரகொண்டா
தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்கணும் - விஜய் தேவரகொண்டா...
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது.. ஏன் தெரியுமா?...
சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?
சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?...