Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் ஃப்ளாப் ஆகும் என நினைத்த கார்த்திக்… காரணம் இதுதான்

Unnidathil Ennai Koduthen: இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து ரோஜா, ரமேஷ் கண்ணா, மௌலி, மதன் பாபு என பலர் நடித்திருந்தனர். மேலும் நடிகர் அஜித் குமார் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அஜித் குமார் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் ஃப்ளாப் ஆகும் என நினைத்த கார்த்திக்… காரணம் இதுதான்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 07 Apr 2025 14:39 PM

பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் தான் நடிகர் கார்த்திக் (Actor Karthik). கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி பிறந்த இவர் சென்னையில் தனது கல்வியை முடித்தார். கடந்த 1981-ம் ஆண்டு இயக்குநர் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை (Alaigal Oivathillai) படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் கார்த்திக். இந்தப் படத்தில் நடிகை ராதா நாயகியாக நடித்தார். இவருடன் இணைந்து தியாகராஜன், சில்க் சுமிதா, கமலா காமேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடித்த கார்த்திக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நினைவெல்லாம் நித்யா, வாலிபமே வா வா, கேள்வியும் நானே பதிலும் நானே நேரம் வந்துடுச்சு என தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நடிகர் கார்த்திக் சினிமாவில் நடிப்பது மட்டும் இன்றி பாடகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. குறிப்பாக அக்னி நட்சத்திரம், வருசம் பதினாறு, கிழக்கு வாசல், பொன்னுமணி, பூவேலி, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொத்தது.

நடிகர் கார்த்திக் கிராமத்து நாயகனாக நடித்தாலும் சரி சிட்டியில் இருக்கும் நபராக நடித்தாலும் சரி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். இந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடித்தபோது நடிகர் கார்த்திக் பேசியது குறித்து நடிகரும் இயக்குநருமான சுரேஷ் கண்ணா பேட்டி ஒன்றில் பேசியது வைரலாகி வருகின்றது.

படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்தப் படத்தில் கார்த்திக் மற்றும் ரமேஷ் கண்ணா இருவரும் திருடர்களாக இருந்து பின்னர் நாயகி ரோஜாவின் கனவை நிறைவேற்ற முயற்சிகள் செய்து வெற்றியும் அடைவார்கள். இந்தப் படத்தில் நடிக்கும் போதே நடிகர் கார்த்திக் ரமேஷ் கண்ணாவிடம் ஓடாத படத்துல இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என்று தொடர்ந்து தெரிவித்துள்ளார்.

அதற்கு காரணம் முன்னதாக இவரது நடிப்பில் இதே மாதிரி ஒரு கதையில் உருவான படம் தோல்வியடைந்ததுதான். அது நந்தவன தேரு என்ற படம் ஆகும். இந்தப் படத்திலும் நாயகியின் கனவை நிறைவேற்ற போராடும் நாயகனாகவே நடிகர் கார்த்திக் நடித்திருப்பார். அந்தப் படம் தோல்வி அடைந்ததால் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படமுக் தோல்வியடையும் என்று கார்த்திக் நினைத்துள்ளார்.

நந்தவன தேரு படத்தில் இறுதிக் காட்சியில் நாயகி கார்த்திக்கை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொள்வார். அதனால் அந்தப் படம் தோல்வி அடைந்தது. ஆனால் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் ரோஜா இறுதியில் தன் ஆசையை நிறைவேற்றிய நாயகன் கார்த்திக் உடனே இணைவார் இதனை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். படம் சூப்பர் ஹிட் அடித்தது.