சந்தானம் அதுபோன்ற கதாப்பாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் – நடிகர் ஜீவா ஓபன் டாக்

Actor Jiiva About Actor Santhanam: நடிகர் ஜீவா மல்ட்டி ஜானரில் நடிக்கும் நடிகர் என்பதற்கு உதாரணம் நிறைய இருக்கிறது. காமெடி படங்களிலும், சீரியசான கதாப்பாத்திரத்திலும் நடிக்க கூடிய மல்டி டேலண்டன் நடிகர் தான் ஜீவா. அவரால் சிவா மனசுல சக்தி போன்ற காமெடி படத்திலும் ராம், கற்றது தமிழ் போன்ற சீரியசான படங்களிலும் நடிக்க முடியும் என்பதே உதாரணம்.

சந்தானம் அதுபோன்ற கதாப்பாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் - நடிகர் ஜீவா ஓபன் டாக்

ஜீவா, சந்தானம்

Published: 

10 Apr 2025 16:02 PM

 IST

நடிகர் சந்தானம் (Santhanam) அவ்வப்போது காமெடி கதாபாத்திரத்திலும் நடிக்கலாமே என்று நடிகர் ஜீவா (Jiiva) முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் இளைய மகன் தான் நடிகர் ஜீவா. 1991-ம் ஆண்டு காலங்களின் அவ்வப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஜீவா. பிறகு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் (Super Good Films) நிறுவனத்தின் தயாரிப்பில் 50-வது படமாக உருவான ஆசை ஆசையாய் என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். 2005-ம் ஆண்டில் இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவான ராம் படம் ஜீவாவின் சினிமா கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. சினிமாவில் சுலபமாக அறிமுகம் ஆவதற்கு வேண்டுமானால் இவரின் தந்தை பெயர் இவருக்கு உதவியாக இருந்தது என்றாலும், ஜீவாவின் கடின உழைப்புதான் தற்போதும் இவர் முன்னணி நடிகர்களின் பட்டியளில் இருக்க காரணம்.

வருஷத்துக்கு ஒரு ஹிட் படம் நடிக்கனும்ற ஜீவாவிற்கு சினிமா கெரியரில் ரசிகர்களை அதிகமாக கொடுத்தது சிவா மனசுல சக்தி படம் தான். இந்தப் படத்தில் ஜீவா மற்றும அவரது நண்பர் சந்தானம் காமெடி ஒருபுறம் ஹிட் அடித்தாலும், ஜீவாவின் அம்மாவாக நடிகை ஊர்வசி கலக்கியிருப்பார்.

அதனை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், கோ, ரௌத்திரம் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்த ஜீவா 2012-ம் ஆண்டு நடிகர் விஜயுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்தார்.  பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற படத்தில் நடித்தார் ஜீவா. தற்போது கோலிவுட் சினிமா மட்டும் இன்றி டோலிவுட், மோலிவுட், பாலிவுட் என்று பான் இந்திய மொழிகளில் நடிகராக வலம் வருகிறார் ஜீவா.

இந்த நிலையில் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திவரும் நடிகர் ஜீவாவின் நடிப்பில் கடந்த ஆண்டு ப்ளாக் என்ற படம் வெளியானது. ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது பா.விஜய் இயக்கத்தில் அகத்தியன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமும் ஹாரர் பாணியில் உருவாகி வருவது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய ஜீவா சந்தானம் தற்போது எல்லாம் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பது இல்லை. அவர் தொடர்ந்து நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவ்வப்போது செகண்ட் ஹீரோ அல்லது அதுபோன்ற கதாப்பாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் சந்தானம் மற்றும் ஜீவாவின் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அந்த காம்போவில் மீண்டும் ஒரு படம் வந்தால் நன்றாகதான் இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories
Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்
வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தகுதிப்பெற்ற இந்தியத் திரைப்படம்!!
உலக அளவில் 100 சிறந்த இனிப்புகளில் இடம்பெற்ற 2 இந்திய இனிப்புகள் - எது தெரியுமா?