தனுஷின் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? தேதி அறிவித்த படக்குழு

Kubera Movie Audio Launch: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளப் படம் குபேரா. படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் இசை வெளியிட்டு விழா எப்போது என்ற அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

தனுஷின் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? தேதி அறிவித்த படக்குழு

குபேரா

Updated On: 

29 May 2025 12:42 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் குபேரா படம். தெலுங்கு சினிமா இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜிம் சர்ப், சாயாஜி ஷிண்டே, தலிப் தஹில், திவ்யா டிகேட், ஹரீஷ் பெராடி, சவுரவ் குரானா, கௌஷிக் மஹதா, கர்னல் ரவி சர்மா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் கடந்த 25-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு அன்று டீசர் வெளியிட்டது. இந்த டீசரைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அடுதடுத்த அப்டேட்கள் படக்குழு வெளியிட்டு வருகின்றனர். இது ரசிகரக்ளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

தனுஷின் குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டும் இன்றி தற்போது பான் இந்தியா அளவில் தன்னை நிரூபித்து வருகிறார். தமிழில் இருந்து ஹாலிவுட் சென்று தன்னை நிரூபித்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்த நிலையில் இவர் தற்போது அடுதடுத்து மூன்று படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார்.

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் குபேரா மற்றும் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை மற்றும் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.