தனது ரேஸ் காருடன் அஜித் குமார் கொடுத்த மாஸான போஸ்… இணையத்தில் வைரலாகும் போட்டோ

Actor Ajith Kumar New Photo: கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் தனது நடிப்பு மற்றும் ரேஸிங்கில் தொடர்ந்து கவனம் செலுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனது ரேஸ் காருடன் அஜித் குமார் கொடுத்த மாஸான போஸ்... இணையத்தில் வைரலாகும் போட்டோ

அஜித் குமார்

Published: 

26 Nov 2025 21:28 PM

 IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அஜித் குமார். இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். அதன்படி தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை 63 படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் அஜித் குமார் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டுமே நடிக்காமல் அவ்வபோது தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் கேமியோ வேடத்திலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் தமிழில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

இதன் காரணமாக தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேறபைப் பெற்றது தொடர்ந்து நடிகர் அஜித் குமார் அவரது 64-வது படத்திற்காக மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது ரேஸ் காருடன் அஜித் குமார் கொடுத்த மாஸான போஸ்:

இந்த நிலையில் தொடர்ந்து படங்களில் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார் அதே நேரத்தில் அவரது ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா மற்றும் ரேசிங்கை தனது இரண்டு கண்களாக பார்த்து வரும் நடிகர் அஜித் குமார் பல கார் பந்தையப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று தனது தாய் நாடான இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெனிஸ் நகரத்தில் வழங்கப்படும் ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருதை அளித்து கௌரவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் அஜித் குமார் அவரது ரேஸ் காருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… LK7 படத்தின் ப்ரீ புரடெக்‌ஷன் பணிகளில் களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்!

சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் ஆண்டனி எழுதி, இசையமைத்து, பாடிய மனசு வலிக்குது பாடல் வெளியானது

அனு தாக்குதல்களை தாங்கக் கூடிய செயற்கை மிதக்கும் தீவை உருவாக்கும் சீனா
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்!