நான் நடிகரானது ஒரு விபத்து… இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி
Actor Ajith Kumar: நடிகர் அஜித் குமார் இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் இன்று அவரது பேட்டி வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) மிகவும் தனிமை விரும்பி என்று கூறலாம். அவர் தன்னை பெரிய அளவில் சமூக வலைதளங்களில் காட்டிக் கொள்ள மாட்டார். சினிமாவில் நடிப்பதை தவிற வேறு எந்த ஊடங்கள் வழியாகவும் அவர் மக்களுடன் தொடர்பில் இருக்க மாட்டார். பிரலங்கள் பலரும் தங்கள் பெயரில் எக்ஸ் தள பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கணக்குகளை வைத்திருக்கின்றனர். ஆனால் இது எதுவும் இல்லாமலே மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உடையவர் நடிகர் அஜித் குமார். இவர் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவின் எக்ஸ் தள பக்கதிலே அஜித் தனது பெயருடன் அறிவிப்பார். இப்படி இருக்கையில் கார் ரேஸ் பந்தையத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் தொடர்ந்து சமீப காலமாக பேட்டிகளை அளித்து வருகிறார்.
இந்த நிலையில் மத்திய அரசு நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருதை கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று நடிகர் அஜித் குமார் பிறந்த நாள். அதனை முன்னிட்டு இந்தியா டுடே செய்திக்கு அளித்தப் பேட்டியை அவர்கள் தங்களது யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
இணையத்தில் வைரலாகும் அஜித்தின் பேட்டி:
பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித்தின் நேர்காணல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தப் பேட்டியில் நடிகர் அஜித் குமார் தன்னை ஒரு ஆக்சிடண்டலான நடிகர் என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தான் ஏன் அப்படி உணர்கிறேன் என்பதையும் விளக்கியுள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகர் அஜித் குமார் தனது உண்மையான ஆர்வமான கார் பந்தயத்திற்காக நிதி திரட்டுவதற்காக மட்டுமே சினிமாவில் இணைந்து நடிக்கத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் அஜித் 18 வயதில் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்த நாட்கள் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கார் பந்தையத்தின் மீதுள்ள அஜித்தின் ஆர்வம்:
மேலும் நடிகர் அஜித்தின் ஆர்வமான கார் பந்தயத்திற்கு தனது பெற்றோரால் பணம் செலுத்த முடியவில்லை. அந்த நேரத்தில் அவர் மாடலிங் பணிகளை மேற்கொண்டார், அது அவருக்கு நல்ல ஊதியம் அளித்தது. அவரது பேச்சில், நடிப்பு ஒருபோதும் என் பார்வையில் இல்லை. நான் ஒரு தற்செயலான நடிகர். எனக்கு பணிகள் கிடைக்கத் தொடங்கின, அங்கு நான் சம்பாதித்த பணத்தை நான் கார் பந்தயத்தில் செலவிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகர் அஜித் குமார், ஒரு கட்டத்தில் திரைப்படங்களிலிருந்து தனது நிலையான வருமானம் எவ்வாறு கடுமையான கடன்களிலிருந்து மீள உதவியது என்பதையும் வெளிப்படையாக பேசினார். திரைப்படங்களில் தனது பணியால் புகழையும் நட்சத்திர அந்தஸ்தையும் சம்பாதிக்க அவர் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் தெளிவாக கூறினார்.
நடிகர் அஜித் குமார் எப்போதும் செய்ய விரும்பியதெல்லாம் தனது கடன்களை அடைப்பதுதான். அஜித் குமார், நான் பிரபலமடையவோ அல்லது புகழைத் தேடியோ தொழில்துறைக்கு வரவில்லை. எனது கடன்களை அடைக்க பணம் தேவைப்பட்டது. எனது முதல் சில படங்களை நீங்கள் பார்த்தால், நான் ஒரு பயங்கரமான நடிகர் என்றும் தெரிவித்திருந்தார்.