Ajith Kumar : சூப்பர் ஹிட்.. 25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த அஜித்தின் குட் பேட் அக்லி!
Good Bad Uglys 25-Day Total Collection : நடிகர்கள் அஜித் குமார் மற்றும் த்ரிஷாவின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியாகிய படம் குட் பேட் அக்லி. இந்த படமானது அஜித்தின் ரசிகர்களுக்கு என்ற மாதிரி மாஸ் சம்பவங்களுடன் சிறப்பாக வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்த நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்துப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோலிவுட் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran). இவரின் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகிய படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இவர் மேலும் இறுதியாக இயக்குநர் மகிழ் திருமேனியின் விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித்துடன் ஜோடியாகவும், இந்த படத்தைத் தொடர்ந்துதான் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகர் அஜித் குமார் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த நிறுவனம் நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தையும் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த குட் பேட் அக்லி படமானது கடந்த ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இன்றுடன் இந்த படமானது வெளியாகி 25 நாட்களைக் கடந்த நிலையில் படக்குழு இந்த படத்தின் மொத்த வசூல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அஜித்தின் இந்த படமானது இதுவரை ரூ. 250 கோடிகளை வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது இந்த தகவலானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த 2025ம் ஆண்டு கோலிவுட் சினிமாவில் இதுவரை வெளியான படங்களிலே அதிகம் வசூல் செய்துள்ள தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
குட் பேட் அக்லி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
25 days of OG Sambavam maamey 🔥#25DaysOfBlockbusterGBU 💥
An @adhikravi sambavam
The Hit Machine @gvprakash musical #Ajithkumar sir @mythriofficial @tseries @sureshchandraa sir @trishtrashers mam @AbinandhanR @editorvijay @tseriessouth @donechannel1 pic.twitter.com/XUwRcMZ1C2
— raahul (@mynameisraahul) May 4, 2025
நடிகர் அஜித் குமாரின் 63வது திரைப்படமான குட் பேட் அக்லி, உலகளாவிய வசூலில் இதுவரை ரூ. 250 கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்த படத்தய் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவரின் மகன் ஆத்விக்கையும் கார் ரேஸில் கலந்துகொள்ளவைக்கவுள்ளார். அதற்கான பயிற்சியில் அவரின் மகன் ஆத்விக்கும் இறங்கியுள்ளார்.
மேலும் நடிகர் அஜித் குமாருக்குக் கடந்த 2025ம் மாதத்தின் இறுதியில் இந்திய அரசின் சார்பாகப் பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நடிகர்களில் சிறந்தவர் மற்றும் சமூக பொறுப்புடையவர் என்று இந்திய அரசு அஜித் குமாருக்குப் பத்ம பூஷன் விருதைக் கொடுத்துள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். மேலும் நடிகர் அஜித் குமார் தனது 64வது திரைப்படத்தையும் பிரபல இயக்குநருடன் மீண்டும் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் வேறு யாருமில்லை, குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுடன்தான். இந்த புதிய படத்திற்கும் இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளாராம். மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.