மீண்டும் சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ் – யார் இயக்கத்தில் தெரியுமா?

Actor Abbas Re Entry In Cinema: நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருக்கும் நடிகர் அப்பாஸ் மீண்டும் திரையில் தோன்றுவது அவரது ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமையும். மேலும் சமீபத்தில் அவர் யூடியூப் சேனல்களுக்கு அவர் அளித்த பேட்டியும் வைரலானது குறிப்பிடதக்கது.

மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ் - யார் இயக்கத்தில் தெரியுமா?

நடிகர் அப்பாஸ்

Updated On: 

21 Apr 2025 08:09 AM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார் நடிகர் அப்பாஸ் (Abbas). கொல்கத்தாவில் 1975-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி பிறந்த இவர் தனது படிப்பு எல்லாமே மும்பையில் முடித்துள்ளார். மாடலான தனது வாழ்க்கையை தொடங்கிய அப்பாஸ் 1996-ம் ஆண்டு இயக்குநர் கதிர் இயக்கத்தில் வெளியான காதல் தேசம் (Kadhal Desam) படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இவருடன் இணைந்து நடிகர் வினீத் நடித்திருந்தார். இரண்டு நாயகன்களின் ஒருவராக அப்பாஸ் இந்தப் படத்தில் அறிமுகம் ஆகியிருந்தார். நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதிலிப்பதை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் வரும் முஸ்தபா பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து அப்பாஸ் நடிப்பில் வெளியான விஐபி, பூவேலி, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம், அடிதடி ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, ஆகிய படங்கள் அப்பாஸிற்கு பெண் ரசிகர்களை அதிகமாக கொடுத்தது என்றே சொல்லலாம். 2000 ஆண்டு வரை பல முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர் பின்பு சப்போர்ட்டிங் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார்.

2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சக்கல்லமின் தான் நடிகர் அப்பாஸ் நடித்த கடைசி படம் ஆகும். அதனைத் தொடர்ந்து அவர் சினிமாவில் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அப்பாஸ் எங்கே என்று தேடும் அளவிற்கு அவர் திரையுலக வாழ்க்கையை விட்டு விலகியே இருந்தார்.

குடும்பத்துடன் வெளிநாட்டில் அப்பாஸ் செட்டிலாகிவிட்டதாகவும் அங்கு பெட்ரோல் பங்க்கில் வேலை, மெக்கனிக் வேலை என்று கிடைத்த வேலைகளை எல்லாம் அவர் செய்து வந்தகாகவும் முன்னதாக சில செய்திகள் பரவின. ஆனால் இதுகுறித்து நடிகர் அப்பாஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவித்தது இல்லை.

இந்த நிலையில் நடிகர் அப்பாஸ் தற்போது மீண்டும் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. அதன்படி அவர் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் சற்குணம் ஒரு புதிய வெப் தொடரை இயக்கி வருகிறா.

இந்த வெப் தொடரில் நடிகை துஷாரா விஜயன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த வெப் தொடரில் நடிகர் அப்பாஸ் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக தொடரின் பாதி படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் தற்போது மீதமுள்ள பகுதியில் அப்பாஸ் இணைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகர் அப்பாஸ் அல்லது படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால் இதில் அப்பாஸ் நடித்திருந்தால் அவரது ரீ என்ட்ரி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

Related Stories
வீக்கெண்டில் வீட்லேயே ஜாலியா ஒரு படம் பார்க்கனுமா? இந்த நெய்மர் படத்தை மிஸ் செய்யாமல் பாருங்க
Year Ender: 2025ல் ரூ 100 கோடிகள் வசூல் செய்த தமிழ் நடிகர்களின் படங்கள் என்னென்ன.. விவரமாக தெரிஞ்சிக்கோங்க!
2025-ம் ஆண்டில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களின் லிஸ்ட் இதோ
Sudha Kongara: சிவகார்த்திகேயன் அற்புதமான நடிகர்… பராசக்தி படத்திற்கு ஓகே சொன்னது இப்படித்தான்- சுதா கொங்கரா!
Suriya47: இந்தியாவில் முதல் முறை.. சூர்யா47ல் பயன்படுத்தப்படும் சிறப்பான தொழில்நுட்பம்? என்னனு தெரியுமா?
Sivakarthikeyan: பராசக்தி படம் வீரம், புரட்சி, காதலை பேசும்.. பொங்கலுக்கு நல்ல கொண்டாட்ட படமாக இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!
உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?