Abhishan Jeevinth: பிரதீப் ரங்கநாதனுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்… வெளிப்படையாக பேசிய டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்!

Abhishan Jeevinth About Comparison: கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த திரைப்படம்தான் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை இயக்கியும், அதிலே சிறு வேடத்தில் நடித்தும் மக்களிடையே பிரபலமானவர் அபிஷன் ஜீவிந்த். இவர் தற்போது பிரதீப் ரங்கநாதனை ஃபாலோ ரசிகர்கள் ஒப்பிட்ட நிலையில், அது குறித்து மனம் திறந்துள்ளார்.

Abhishan Jeevinth: பிரதீப் ரங்கநாதனுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்... வெளிப்படையாக பேசிய டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்!

பிரதீப் ரங்கநாதன் மற்றும் அபிஷன் ஜீவிந்த்

Published: 

28 Jan 2026 16:45 PM

 IST

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநராக படத்தை இயக்கி, தற்போது ஹீரோவாகவும் படத்தில் நடித்துவருபவர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth). இவர் கடந்த 2025ம் ஆண்டு வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) என்ற திரைப்படத்தை இயக்கி மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்திருந்த நிலையில், மிக பிரம்மாண்ட வரவேற்பைப்பெற்று சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஒரு சிறிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதை அடுத்ததாக தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தயாரிப்பில் இவர் நடித்துள்ள படம்தான் வித் லவ் (With Love). இப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இவர் தற்போது நடிகர் பிரதீப் ரங்கநாதனை (Pradeep Ranganathan) பின் தொடரும் விதத்தில், இயக்குநராக முதல் படத்திற்கு பின் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் பிரதீப் ரங்கநாதனைப்போலவே நடிக்கிறார் என ரசிகர்கள் ஒப்பீடு வருகிறார்கள். இது குறித்து அபிஷன் ஜீவிந்த் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் ஹீரோவா நடிக்க முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

ரசிகர்கள் ஒப்பீடு குறித்து மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த் :

அந்த நேர்காணலில் பேசிய அபிஷன் ஜீவிந்த், வித் லவ் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து பேசி அவர், பிரதீப் ரங்கநாதனுடன் ரசிகர்கள் ஒப்பிடுவது குறித்து தெரிவித்திருந்தார். அதில் அவர், “நானும், பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரே மாதிரியான ஸ்டைலை பின்பற்றுகிறோம். முதல் படத்தை இயக்கியபிறகு நாங்கள் நடிக்க்க தொடங்கிவிட்டோம். மேலும் டீசர் காட்சிகளில் அதிகளவிலான ஆற்றலையும், உணர்ச்சியையும் கொண்டுள்ளது. நீங்கள் முழு திரைப்படத்தை பார்த்தவுடன் அந்த ஒப்பீடு பொருந்தாது” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்… ஜன நாயகன் படக்குழு எடுக்கப்போகும் முடிவு என்ன – வைரலாகும் தகவல்

வித் லவ் படம் குறித்து அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த வித் லவ் படத்தை அறிமுக இயக்குநர் மதன் வியக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் த்யாரித்துவருகிறார். இந்த படமானது வித்தியாசமான காதல் கதைக்களத்தில் அமைந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படமானது வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதியோடு உலகமெங்கும் வெளியாகிறது. குறிப்பாக இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல் - அப்படி என்ன ஸ்பெஷல்?
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் டிக்கெட் ரத்து செய்தால் அபராதம் - விதிகளை கடுமையாக்கிய இந்தியன் ரயில்வே
3 வீடுகள், கார்... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர் - அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்
வீட்டிற்கு அடித்தளம் தோண்டும் போது கிடைத்த தங்கம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..