Aarthi Ravi: எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய மனைவி ஆர்த்தி!
Arthi Ravi Statement : நடிகர் ரவி மோகன் என்றாலே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தெரியாத நபர்களே இருக்க முடியாது என்றே கூறலாம்.சமீபகாலமாக ரவி மோகனுக்கும், ஆர்த்தி ரவிக்கும் விவாகரத்து பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், ஐசரி கே கணேஷின் மகள் திருமணத்திற்கு, தோழியான பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி
கோலிவுட் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து வருபவர் ரவி மோகன் (Ravi Mohan) . ஜெயம் (Jayam ) என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். இவரின் மனைவிதான் ஆர்த்தி (Arthi Ravi) . இவர் பிரபல தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆவார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். சில மனக் கசப்பின் காரணமாகக் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து (Divorce) செய்யவிருப்பாக்க அறிவித்திருந்தார். ஆனால் இந்த விவாகரத்தில் மனைவி ஆர்த்தி ரவிக்கு விருப்பமில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. இவர்கள் இருவரின் விவாகரத்து வழக்கானது நடந்து வருகிறது. இன்னும் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் ரவி மோகன், பிரபல பாடகியான கெனிஷா பிரான்சிசை (Kenisha Francis) காதலித்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் இது குறித்து இருவரும் நாங்கள் நட்புறவில் இருக்கிறோம் என்று கூறிவந்தனர். இந்நிலையில் இன்று 2025, மே 9ம் தேதியில், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கே கணேஷின் மகள் ப்ரீத்தா கணேஷின் திருமணம் நடைபெற்றிருந்தது.
இந்த திருமணத்தில் பாடகி கெனிஷா மற்றும் ரவி மோகன் ஒரே நிற உடையணிந்து கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும், ஆர்த்தி ரவிக்கு விவாகரத்து கிடைத்ததாகவும் தகவலால் பரவி வந்த நிலையில், தற்போது ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அதில் எனது குழந்தைகளுக்காக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன், எனக்காக அல்ல என்று கூறி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை :
அந்த அறிக்கையில் ஆர்த்தி ரவி “நான் ரவி மோகனின் மனைவியாகப் பேசவில்லை, எனது இரு மகன்களின் அமைதிக்காகப் பேசுகிறேன். என்று கூறி தொடங்கியுள்ளார். இதுவரை நான் பல குற்றச்சாட்டுகளையும், கிசுகிசுக்களை கேட்டுவருகிறேன். ஆனால் அதற்கு நானா எதுவும் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் நான் பட்ட கஷ்டங்களை எனது குழந்தைகள் சுமப்பதை விரும்பவில்லை. எனது விவாகரத்து வழக்கானது நடந்துதான் வருகிறது, எனது 18 வருடத் திருமண வாழ்க்கையில் நான் இதை எதிர்பார்க்கவில்லை. உண்மையாக இருந்திருந்தால், எனது தனிப்பட்ட நலன்களை நான் நீண்ட காலத்திற்கு முன்பே பாதுகாத்திருப்பேன். ஆனால் நான் எனது பாதுகாப்பை விடவும் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்.
அது மேலும் இது என்னை அழைத்து வந்த இடம் விவாகரத்து. எனக்கு 10 மாறும் 14 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். நான் இன்று பேசுவது மனைவியாக அல்ல. ஒரு பெண் அநீதி இழைத்தது போலவும் இல்லை, நான் எனது குழந்தைகளின் நல்வாழ்வை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு தாயாக நான் பேசுகிறேன். நான் இப்போது பேசவில்லை என்றால், நான் தோல்வியடைந்ததற்கு அர்த்தமாகிவிடும். நீங்கள் தங்கப் பட்டு அணிந்து செல்லலாம், உங்கள் வாழ்க்கையில் வேறு ரோலை மாற்றலாம், ஆனால் ஒரு உண்மையை மாற்றி எழுத முடியாது. தந்தை என்பது வெறும் பட்டப்பெயர் அல்ல. இது ஒரு பொறுப்பு என்று சாடியுள்ளார்.
மேலும் ஊடகங்களுக்கு விவாகரத்து வழக்கு முடியும் வரை என்னை முன்னாள் மனைவி என்று அழைப்பதைத் தவிர்த்தால் நன்றாக இருக்கும். நான் இந்த அறிக்கையை இது பழிவாங்குவதற்காக அல்ல, இது காட்சியல்ல, இது நான் ஒரு தாயாகக் கூறுகிறேன் என்று ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த விஷயமானது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.