Bigg Boss Tamil: பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் அதிக வாக்குகள் பெற்ற போட்டியாளர் யார் தெரியுமா?

Bigg Boss Most Voted Contestant: தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவரும் ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ். இந்த 2025ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இதுவரை வெளியான 8 சீசன்களில் மக்களிடையே அதிக வாக்குகள் பெற்ற போட்டியாளர் யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Bigg Boss Tamil: பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் அதிக வாக்குகள் பெற்ற போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் தமிழ்

Published: 

29 Sep 2025 21:02 PM

 IST

ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது இந்தியாவில் முதன்முதலில் இந்தி மொழியில் தொடங்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ஆண்டுதோறும் வெளியாகிவருகிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியின் (Vijay TV)மூலம் இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் (Kamal Haasan) ஆரம்பத்தில் தொகுத்து வழங்கியிருந்தார். மேலும் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் இதுவரை 8 சீசன்கள் வெளியாகியிருக்கிறது. இந்த 8 சீசன்களில் அதிக வாக்குகள் பெற்ற போட்டியாளர் யார் தெரியுமா? அவர் ஒரு ஆண் போட்டியாளர்தான். அவர் வேறுயாருமில்லை நடிகர் ஆரி அர்ஜுனன்தான் (Aari Arujunan). இவர் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான பிக்பாஸ் சீசன் 4ல் இவர் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்களா? வைரலாகும் தகவல்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி :

கடந்த 2020 – 2021ம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனா, பாலாஜி முருகதாஸ் , ரியோ, ரம்யா, ஷிவானி, அர்ச்சனா, சனம் ஷெட்டி, ஆஜித் உட்பட பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி அர்ஜூனாதான் பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்றார்.

இதையும் படிங்க : வாசூலில் தெறிக்கவிடும் பவன் கல்யாணின் OG படம்… எவ்வளவு தெரியுமா?

மேலும் இரண்டவது இடத்தை பாலாஜி முருகதாஸ் பெற்றிருந்தார். இந்த சீசன் 4 நிகழ்ச்சில் அதிகம் சண்டைகள், எமோஷனல் விஷயங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் இருந்தது. இந்த பிக்பாஸ் சீசன் 4ல் வெற்றிப்பெற்ற ஆரி அர்ஜுனா சுமார் ரூ 50 லட்சத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரி அர்ஜுனாவின் இன்ஸ்டாகிராம் லேட்டஸ்ட் போஸ்ட் :

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடக்கம் எப்போது? எதில் பார்க்கலாம்?

இந்த 2025ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியானது வரும் 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 24 போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியானது 2025 அக்டோபர் 5ம் தேதியன்று மாலை 6 மணியளவில் தொடங்கவுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.