நெக்ஸ்ட் டார்கெட் குழந்தைகள்தான்.. குரங்கை மையப்படுத்தி படம் எடுக்கவுள்ளேன்- இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!
AR. Murugadoss Next Project : தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரின் இயக்கத்தில் இறுதியாக மதராஸி படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கவுள்ள புது படம் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

ஏ.ஆர்.முருகதாஸ்
பான் இந்தியாவின் பிரபல இயக்குநர்களின் பட்டியலில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR.Murugadoss). இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழி சினிமாவிலும் இயக்குநராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் தளபதி விஜயுடன் (Thalapathy Vijay) மட்டும் இருமுறை இணைந்து படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் மதராஸி (Madharaasi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முன்னணி கதாநாயகனாக நடிக்க, ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், பெரும் தோல்வியை சந்தித்திருந்தது.
கடந்த 2025ல் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மதராஸி மற்றும் இந்தியில் சிக்கந்தர் போன்ற படங்களும் வெளியாகியிருந்தது. இந்த இரு படங்களும் வசூல் மற்றும் விமர்சனங்கள் ரீதியாக பெரும் தோல்வியடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இவர் இயக்கவுள்ள புது படம் குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 27 தியேட்டர்தான் கொடுத்தாங்க.. தமிழ் சினிமா சாகும்.. கொதித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
குரங்கை மையமாக கொண்டு படம் இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “எனது புது படத்தில் ஒரு குரங்கை மையப்படுத்தி, இயக்க திட்டமிட்டுளேன். இந்த கதையை நான் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த நேரத்தில் முடிவுசெய்தேன்.
இதையும் படிங்க: டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் சாண்ட்ராவை கடுப்பேத்தும் கம்ருதின் மற்றும் பார்வதி – வைரலாகும் வீடியோ
இந்த படத்தை தான் எனது முதல் திரைப்படமாக எடுப்பதற்கும் முடிவு செய்திருந்தேன். இந்த படமானது குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கவுள்ளேன்” என அந்த நேர்காணலில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
மதராஸி படம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Thank you so much Shankar sir 🙏🙏🙏 https://t.co/Bpd8voSSjp
— A.R.Murugadoss (@ARMurugadoss) September 6, 2025
ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் குமாரின் தீனா என்ற படத்தை இயக்கி, இயக்குநராக சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தை அடுத்ததாக விஜயகாந்த், விஜய், சூர்யா, சல்மான்கான், அமீர் கான் மற்றும் மகேஷ் பாபு உட்பட பல்வேறு நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இவ்வாறு பிரம்மாண்ட படங்களை இயங்கிவந்த ஏ.ஆர். முருகதாஸ், குரங்கை மையப்படுத்தி படத்தை இயக்கவுள்ளாரா என ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த படமானது குழந்தைகளுக்கான கிராஃபிக்ஸ் படமாக இருக்கும் என ஏ.ஆர். முருகதாஸே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.