தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன?.. அவற்றின் முக்கியத்தும் என்ன?

What is Model Code of Conduct | தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்ததுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன, அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன?.. அவற்றின் முக்கியத்தும் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 Mar 2026 20:11 PM

 IST

இந்திய தேர்தல் ஆணையம் (ECI – Election Commission of India) மார்ச் 15, 2026 அன்று தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் (Assembly Election) அட்டவணையை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) அந்த 5 மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன, அவை கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன?

தேர்தல் நடத்தை விதிகள் என்பது, தேர்தல் நேரத்தின்போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை வழிநடத்த இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் விதிகள் ஆகும். தேர்தலின்போது எந்த வித சிக்கலும் ஏற்படாமல் முறையாக தேர்தலை வழிநடத்தும் வகையில் இந்த தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வைக்கப்படுகின்றன. இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தேர்தல் ஆணையம் அட்டவணை அறிவித்த மறு நொடியே அமலுக்கு வந்துவிடும். பிறகு, தேர்தல் முடியும் வரை அவை அமலில் இருக்கும்.

இதையும் படிங்க : Agri S. S. Krishnamurthy Tamil Nadu Election: அதிமுகவில் “வேளாண்” புனைப்பெயருக்கு சொந்தக்காரர்… எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக் கொள்வாரா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன என்ன?

  • தேர்தல் முடியும் வரை, எந்த வித புதிய திட்டத்தையும் அரசு செயல்படுத்த கூடாது.
  • தேர்தல் பிரசாரங்களின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து, எந்த ஒரு தனிநபர் குறித்து விமர்சனம் செய்ய கூடாது.
  • தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த பிறகு பொதுத்துறை அதிகாரிகள், அரசு பணியாளர்கள் யாரும் பணியிட மாற்றம் செய்யப்படக்கூடாது.
  • தேர்தல் விதிகள் அமலில் இருக்கும்போது எந்த விதமான அரசு விழாக்களையும் நடத்த கூடாது.
  • அமைச்சர்கள் என்ற முறையில் எந்த விதமான பரப்புரைகளையும் மேற்கொள்ள கூடாது. கட்சி சார்பாக பரப்புரை மேற்கொள்ள அனுமதி உண்டு.
  • தேர்தல் பிரசாரங்களை நடத்த கட்சிகளுக்கு எந்த விதமான கட்சி பாகுபாடுகளும் இன்றி பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும்.
  • பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் ரொக்க பணம் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அதற்கான உரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

இதையும் படிங்க : திமுக கூட்டணியில் விஜய்..? ஓ. பன்னீர்செல்வம் சொன்ன சூசக பதில்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்