ஸ்டாலின் பயன்படுத்தும் அதே கார்.. கருப்பு டிஃபண்டரில் வெளியே வந்த விஜய்!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு தந்தையை சந்திக்க சென்றார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தும் பிரீமியம் கார் மாடலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைவர் விஜய்
சென்னை, மே 4 : தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு தந்தையை சந்திக்க சென்றார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தும் பிரீமியம் கார் மாடலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டில் மொத்த 234 தொகுதிகளில் 109 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கட்சிக்கு மிகப்பெரிய முன்னிலை எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில், முக்கியமான அரசியல் தருணத்தில் விஜய் தனது தந்தையை நேரில் சந்திக்கப் புறப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த நேரத்தில், குடும்ப சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் வந்த விஜய்
#WATCH | Tamil Nadu | TVK chief and actor Vijay leaves from his residence in Chennai to meet his father
His party, TVK is leading on 109 seats of the total 234 in the state. pic.twitter.com/DvbljGZx3A
— ANI (@ANI) May 4, 2026