இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல – திமுக தலைவர் ஸ்டாலின்..
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்: “மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம் என தெரிவித்துள்ளார்,

கோப்பு புகைப்படம்
சென்னை, மே 4, 2026: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழகத் தேர்தல் முடிவுகளை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். “மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!” என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மே 4ஆம் தேதி காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றிக்கழகம் சுமார் 17 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்:
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்: “மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடர்வதற்காகவே வாக்கு கேட்டு நாங்கள் பிரச்சாரம் செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலட்சியமும் கொள்கையும் தான் முக்கியம்:
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக்… pic.twitter.com/CCsVdwJX0A
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 4, 2026
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களிடமும் உண்மையாக இருந்தேன். என் மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். என் சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்த தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி!
எனது அரசியல் பொதுவாழ்வில் பல வெற்றிகளையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே, இலட்சியமும் கொள்கையும் தான் முக்கியம்; வெற்றி, தோல்விகள் மட்டுமல்ல என்பதை உணர்ந்து செயல்படுகிறேன்.
அதனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும் கட்சியாக செயல்பட்ட திமுக, இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்,” என தெரிவித்துள்ளார்.