D. Jayakumar Tamil Nadu Election: 5 முறை வெற்றி.. 2 முறை தோல்வி… ராயபுரத்தில் வெற்றிக் கனியை தட்டி பறிப்பாரா ஜெயக்குமார்! | TV9 Tamil News

D. Jayakumar Tamil Nadu Election: 5 முறை வெற்றி.. 2 முறை தோல்வி… ராயபுரத்தில் வெற்றிக் கனியை தட்டி பறிப்பாரா ஜெயக்குமார்!

Updated On: 

19 Mar 2026 13:42 PM

 IST

Tamil Nadu Elections 2026: அதிமுகவில் இணைந்தது கடந்த 1991 முதல் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் வரை 5 முறை வெற்றியையும், இரு முறை தோல்வியையும் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார மீண்டும் ராயபுரம் தொகுதியில் வெற்றிக் கனியை தட்டிப்பறிப்பாரா.

1 / 5அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் டி. ஜெயக்குமார். இவர், கடந்த 1960- ஆம் ஆண்டு செப்டம்பர் 18- ஆம் தேதி துரைராஜ்- ஜெயக்குமாரி தம்பதிக்கு மகனாக பிறந்தார். அரசியல் ஈடுபாடு மற்றும் அதிமுக மீதான ஈர்ப்பின் காரணமாக அக்கட்சியில் இணைந்தார். பின்னர் கட்சியில் மெல்ல மெல்ல வளர்ந்து வந்த டி. ஜெயக்குமார் கடந்த 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் களமிறக்கப்பட்டார்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் டி. ஜெயக்குமார். இவர், கடந்த 1960- ஆம் ஆண்டு செப்டம்பர் 18- ஆம் தேதி துரைராஜ்- ஜெயக்குமாரி தம்பதிக்கு மகனாக பிறந்தார். அரசியல் ஈடுபாடு மற்றும் அதிமுக மீதான ஈர்ப்பின் காரணமாக அக்கட்சியில் இணைந்தார். பின்னர் கட்சியில் மெல்ல மெல்ல வளர்ந்து வந்த டி. ஜெயக்குமார் கடந்த 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் களமிறக்கப்பட்டார்.

2 / 5

அப்போது, தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்ததுடன் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். பின்னர் 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் களமிறக்கப்பட்ட ஜெயக்குமார் 2-ஆவது முறையாக எம்எல்ஏ பதவியை அடைந்தார். இதைத் தொடர்ந்து, 2011- ஆம் ஆண்டு 3-ஆவது முறையாக எம்எல்ஏ ஆன ஜெயக்குமார் சட்டப்பேரவையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 2016- ஆம் ஆண்டு மீன்வளத்துறை அமைச்சராக டி. ஜெயக்குமார் பொறுப்பேற்றார்.

3 / 5

2017- ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நிதியமைச்சர் பொறுப்பையும் ஜெயக்குமார் வகித்து வந்தார். இதன் மூலம், கடந்த 1991 முதல் 2021 வரை மீன்வளம், வனத்துறை, தகவல் தொழில்நுட்பம், நிதித்துறை, மின்சார துறை ஆகிய பல்வேறு துறைகளில் அமைச்சராக ஜெயக்குமார் பதவி வகித்துள்ளார். தற்போது, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கடந்த 1991 தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயக்குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர். மதிவாணனை வீழ்த்தி 59.04 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

4 / 5

பின்னர் 1996- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் மதிவாணனிடம் தோல்வியை தழுவினார். மீண்டும் 2001 சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் களமிறங்கிய டி ஜெயக்குமார் திமுக வேட்பாளர் கே. நற்குணனை 56.76 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்தார். 2006 தேர்தலில் திமுக வேட்பாளர் சற்குண பாண்டியனை வீழ்த்தி 53.26 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியை உறுதிப்படுத்தினார். 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் மனோகரை வீழ்த்தி 57.89 சதவீத வாக்குகள் பெற்றார்.

5 / 5

2016 தேர்தலில் திமுக வேட்பாளர் மனோகரை வீழ்த்தி 45.21 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் 7- ஆவது முறையாக களமிறங்கிய ஜெயக்குமார் திமுக வேட்பாளர் மூர்த்தியிடம் 30.46 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இதனால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக கூறியுள்ள ஜெயக்குமார் தன் வெற்றியை வசப்படுத்திக் கொள்வாரா. தேர்தல் களம் அவருக்கு  சாதகமாக உள்ளதா. வெற்றி வசப்படுமா என்பதை தொகுதி மக்களும், தேரத்ல களமுமே நிர்ணயம் செய்யும்.

Follow Us