காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. கே.சி வேணுகோபால் தலைமையில் முக்கிய ஆலோசனை..

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் இதே கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று பெங்களூரு சென்று மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து விளக்கம் அளித்தார். மதுரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தனக்கு தெரியாது என்றும், அகில இந்திய காங்கிரஸ் தலைமை என்ன கூறுகிறதோ அதன்படி தான் செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்தார். 

காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. கே.சி வேணுகோபால் தலைமையில் முக்கிய ஆலோசனை..

கோப்பு புகைப்படம்

Published: 

17 Feb 2026 13:09 PM

 IST

சென்னை, பிப்ரவரி 17, 2026: காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பிப்ரவரி 17ஆம் தேதி இன்று சென்னை வந்துள்ளார். இன்று நடைபெறவுள்ள காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அவர் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸில் வெடித்த கருத்து வேறுபாடு:

2006ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

மேலும் படிக்க: கிராமங்களுக்கு இன்டர்நெட்.. தகவல் தொழில்நுட்பத்தில் அசத்தல் அறிவிப்புகள்…

சில தினங்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி, கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது என அறிவுறுத்தியிருந்தனர். இருந்தபோதிலும், மதுரையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை மின்னஞ்சல் மூலம் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பப்பட்டன.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – கே.சி வேணுகோபால் பங்கேற்பு:

அதேபோல், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் இதே கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று பெங்களூரு சென்று மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து விளக்கம் அளித்தார். மதுரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தனக்கு தெரியாது என்றும், அகில இந்திய காங்கிரஸ் தலைமை என்ன கூறுகிறதோ அதன்படி தான் செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: 2.22 மணி நேரம் பட்ஜெட் உரை வாசித்த தங்கம் தென்னரசு…

இந்நிலையில், இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கூட்டணிக்குள் சலசலப்பு நிலவி வரும் சூழலில், இக்கூட்டத்தில் கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்கப்படுமா, புதிய முடிவுகள் எடுக்கப்படுமா என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!