பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா ? நள்ளிரவில் நடந்த சோதனை.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினரை உடனடியாக உள்ளே அனுமதிக்காமல், சுமார் 2 மணி நேரம் திமுகவினர் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் உள்ளே சென்ற அதிகாரிகள் மேலோட்டமாக மட்டுமே சோதனை நடத்தியதாகவும், அங்கிருந்த ஹேண்ட் பேக்கில் சுமார் 5 கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா ? நள்ளிரவில் நடந்த சோதனை.

கோப்பு புகைப்படம்

Updated On: 

14 Apr 2026 15:53 PM

 IST

சென்னை, ஏப்ரல் 14, 2026: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம், ரோடு ஷோ, பொதுக்கூட்டம், மாநாடு உள்ளிட்டவற்றின் மூலம் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபுறம், வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், கூப்பன்கள், பணம் ஆகியவற்றை பட்டுவாடா செய்யும் நடவடிக்கைகளும் அமைதியாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக, தேர்தல் பறக்கும் படைக்கு சம்பந்தப்பட்ட தொகுதி வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

பெரம்பூர் தொகுதியில் பணப்பட்டுவாடா:

நேற்று நள்ளிரவில், சென்னை பெரம்பூர் 44வது வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கார் ஒன்றில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் விநியோகிப்பதாக, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர்  திலகபாமாவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினரை உடனடியாக உள்ளே அனுமதிக்காமல், சுமார் 2 மணி நேரம் திமுகவினர் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் உள்ளே சென்ற அதிகாரிகள் மேலோட்டமாக மட்டுமே சோதனை நடத்தியதாகவும், அங்கிருந்த ஹேண்ட் பேக்கில் சுமார் 5 கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “பெண்களுக்கு மாதம் ரூ.2,000”.. ரூ.10 லட்சம் வரை வட்டியில்லாத கடன்.. தமிழக பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை..

திமுகவிற்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் பறக்கும் படை:

இந்தச் சம்பவம் தொடர்பாக, “தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை” என்று திலகபாமா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் அதிகாரிகளும் காவல்துறையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என குற்றம்சாட்டினார். பொதுமக்களுக்கு தெளிவாக தெரியும் பண விநியோகம், அதிகாரிகளுக்கு தெரியாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் தாமதமாக வந்ததாகவும், ஒரே ஒரு பெண் காவலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், முழுமையான சோதனை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் படிக்க: மீண்டும் பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்.. மிரட்டல் என்று எடுத்துக்கொண்டாலும் கவலையில்லை – முதல்வர் ஸ்டாலின்

மேலும், சுமார் 200-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் அந்த வீட்டை சூழ்ந்திருந்ததால், அதிகாரிகள் தங்கள் பணியை சுதந்திரமாக செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் வருவதாகத் தகவல் திமுகவினருக்கு எப்படி தெரிந்தது? 5 கோடி ரூபாய் இருந்ததாக சந்தேகம் இருந்தும் அது எப்படி மாயமானது?

சம்பவ நேரத்தில் பொறுப்பான தேர்தல் அதிகாரி இல்லாமல், ஒரு ஊழியர் மட்டுமே பதில் அளித்தது ஏன்? என திலகபாமா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். தேர்தல் அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டிய நிலையில், அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்