ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனிமேல் யுடிஎஸ் செயலி இல்லை.. ரயில் ஒன் செயலி தான்.. இன்று முதல் புதிய நடைமுறை!
Indian Railway Stopped UTS App Services | ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பொதுமக்கள் யுடிஎஸ் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், இன்று (மார்ச் 01, 2026) அது பயன்பாட்டில் இருக்காது என்றும் அதற்கு பதிலாக ரயில் ஒன் செயலி பயன்பாட்டில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்திய பொதுமக்களுக்கு ரயில்கள் பிரதான தேவையாக உள்ளது. குறைந்த செலவில் மிக நீண்ட தூரம் பயணம் செய்யலாம் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ரயில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் டிக்கெட் புக்கிங்கில் இன்று முதல் முக்கிய மாற்றம்
உள்ளூரில் பயணம் செய்ய வேண்டும் என்றால் லோக்கல் ரயிலில் டிக்கெட் எடுத்து பயணம் செய்துக்கொள்ளலாம். ஆனால், வெளியூர்களுக்கு அல்லது வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாவது டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்காக பலரும் செயலிகளை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து வந்த நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : வீட்டில் இருந்தே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
இனி யுடிஎஸ் செயலிகளை பயன்படுத்த முடியாது – இந்திய ரயில்வே
இந்திய ரயில்களில் பயணம் செய்ய, டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக பல செயலிகள் உள்ளன. அத்தகைய செயலிகளில் ஒன்றுதான் யுடிஎஸ். இந்த செயலியை பயன்படுத்தி ஆன்லைன் மூலமே பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், அன்ரிசர்வ்டு டிக்கெட் ஆகிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். இந்த செயலியை பயன்படுத்தி பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து வந்த நிலையில், மார்ச் 01, 2026 முதல் இந்த செயலியை பயன்படுத்த முடியாது என்று இந்திய ரயில்வே அறிவித்தது.
இதையும் படிங்க : மைக்ரோ SIP.. தினமும் வெறும் ரூ.10 முதலீட்டை தொடங்கலாம்.. தெரிஞ்சுக்கோங்க!
யுடிஎஸ் செயலிகளை பயன்படுத்த முடியாத நிலையில், மார்ச் 01, 2026 முதல் ரயில் ஒன் (Rail One) செயலியை பயன்படுத்தலாம் என்று இந்திய ரயில்வே கூறியுள்ளது. ரயில் ஒன் செயலி மூலம் யுடிஎஸ் செயலியில் பெற்ற சேவைகளை தவிர இதர சேவைகளையும் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎன்ஆர் நிலை, ரயில் டிராக்கிங், உணவு ஆர்டர், டிக்கெட் ரீஃபண்ட் உள்ளிட்ட சேவைகளையும் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.