FD-ஐ விட அதிக லாபம் தரும் இரண்டு அஞ்சலக திட்டங்கள்.. என்ன என்ன தெரியுமா?

Best Two Post Office Schemes | அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டத்தை விடவும் அதிக லாபம் தரக்கூடிய இரண்டு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

FD-ஐ விட அதிக லாபம் தரும் இரண்டு அஞ்சலக திட்டங்கள்.. என்ன என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

12 Feb 2026 13:45 PM

 IST

சேமிப்பு (Savings) அல்லது முதலீடு (Investment) என்றாலே சாமானிய மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டங்கள் தான். நிலையான வைப்பு நிதி திட்டங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை கொடுத்தாலும், அதிகரித்து வரும் பண வீக்கத்தை சமாளிக்க போதியதாக இருக்காது. இந்த நிலையில் தான், சிறந்த லாபம் தரக்கூடிய சில திட்டங்களை தேர்வு செய்வது அவசியமாகிறது. அந்த வகையில், நிலையான வைப்பு நிதி திட்டத்தை விடவும் அதிக லாபத்தை கொடுக்க கூடிய இரண்டு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அசத்தல் லாபம் வாழங்கும் 2 அஞ்சலக திட்டங்கள்

அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சிறந்த லாபத்தை கொடுக்க கூடியவை தான் இந்த மாதாந்திர வருமான திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் (POMIS – Post Office Monthly Income Scheme), மாதம் தோறும் வருமானம் வழங்க கூடிய ஒரு திட்டமாக உள்ளது. அதாவது நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், நீங்கள் முதலீடு செய்த பணத்திற்கான வட்டி ஒவ்வொரு மாதமும் உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், அது ஒவ்வொரு மாதமும் உங்களது வங்கி கணக்கில் பிரித்து பிரித்து வரவு வைக்கப்படும்.

இதையும் படிங்க : Gold Price : உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

இந்த திட்டத்தில் தனிநபர் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டு கணக்கு வைத்திருப்பவர் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். இவ்வாறு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மாதம் ரூ.9,250 வருமானமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக உள்ளது. 5 ஆண்டுகள் முடிந்த பிறகு நீங்கள் முதலீடு செய்த மொத்த தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் மற்றொரு அட்டகாசமான திட்டம் தான் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS – Senior Citizen Saving Scheme). இந்த திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரித்து பிரித்து வழங்கப்படும். இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது தங்களது துணையுடன் இணைந்து ரூ.30 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்களுக்கு ரூ.61,500 கிடைக்கும். இதனை மாதத்திற்கு கணக்கிட்டு பார்த்தால் ரூ.20,500 கிடைக்கும்.

இதையும் படிங்க : EPFO : இனி யுபிஐ, ஏடிஎம் மூலமே பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. விரைவில் அமலுக்கு வரும் அசத்தல் அம்சம்!

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்