Bank Holiday : ஜூன் மாதத்தில் மொத்தம் 8 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!
Tamil Nadu Bank Holidays June 2025 | ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு அரசு விடுமுறை உள்ளிட்ட சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி, ஜூன் 2025-ல் சில நாடகள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூன் 2025-ல் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் வார இறுதி விடுமுறை (Weekend Holiday), அரசாங்க விடுமுறை (Government Holiday), உள்ளூர் விடுமுறை (Local Holiday) உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) அளிக்கப்படும். அந்த வகையில், 2025 ஜூன் மாதத்தில் சில நாட்கள் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே மாதம் முடிவடைய உள்ளது, இன்னும் சில நாட்களில் 2025 ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஜுன் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025 ஜூன் மாத வங்கி விடுமுறை நாட்கள் – விரிவான பட்டியல்
List of holidays for Indian Overseas Bank for the year 2025 in the States of #TamilNadu #Puducherry #Kerala & #AndhraPradesh #IOB #Bank #holidays #holidays2025 pic.twitter.com/o4gz1IeJt3
— Hari Krishnan Pongilath (@h_pongilath) January 9, 2025
- ஜூன் 1, 2025 – மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 7, 2025 – பக்ரித் பண்டிகை என்பதால் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 8, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 14, 2025 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 15, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 22, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 28, 2025 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம்தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 29, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பக்ரித் பண்டிகை, வார விடுமுறை உட்பட மொத்தம் 8 நாட்கள் 2025, ஜூன் மாதத்தில் தமிழகத்தில் வங்கிகள் செயல்படாது.
வங்கிகள் செயல்படாத போது பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும் இந்த நாட்களில் பொதுமக்கள் வங்கிகளின் இணைய சேவை மற்றும் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். வங்கிகளின் இந்த சேவைகளை பயன்படுத்தி பொதுமக்கள் மிக சுலபமாக பண பறிமாற்ற சேவைகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.