June Month Changes : கேஸ் சிலிண்டர் விலை முதல் FD வட்டி வரை.. ஜூன் மாதத்தில் வர உள்ள முக்கிய மாற்றங்கள்!
June 2025 Changes | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட பல மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், ஜூன் 2025-ல் சில மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜூன் 2025-ல் வர உள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price), பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol and Diesel Price), ஏடிஎம் (ATM – Automated Teller Machine) பண பரிவர்த்தனை கட்டணம் (Money Transaction Charge) உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றம் ஏற்பட உள்ளது. 2025 மே மாதம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் 2025 ஜுன் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், 2025 ஜூன் மாதத்தில் ஏற்பட உள்ள சில முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025 ஜூன் மாதத்தில் வர உள்ள முக்கிய மாற்றங்கள் – என்ன என்ன?
2025 ஜூன் மாதத்தில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெட்ரோல் டீசல் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையில் மாற்றம் செய்யும். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும். இந்த நிலையில், ஜூன் 2025-ல் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையில் மாற்றம் செய்யும். இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அதன்படி, ஜூன் 2025-ல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நிலையான வைப்பு நிதி வட்டி
தற்போதைய நிலவரத்தின்படி வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 6.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. இந்த நிலையில், ஜூன் 2025 முதல் இந்த வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணம்
2025 ஜூன் மாதம் முதல் ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு அளவுக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் வசூலிக்கப்படும் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் ஏடிஎம் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் அதில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட இவை அனைத்தும் 2025 ஜூன் மாதம் வரவுள்ள முக்கிய மாற்றங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.