Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

Must Know Loan Tips : நடுத்தர வர்க்கத்தினருக்கு பெர்சனல் லோன் என்பது ஆபத்தில் கைகொடுக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் பெர்சனல் லோனை எப்படி தேர்ந்தெடுப்பது? சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது போன்ற முக்கிய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 21 Apr 2025 16:09 PM

பெர்சனல் லோன் (Personal Loan) என்பது நமது தனிப்பட்ட தேவைகளுக்காக வாங்கப்படும் கடனாகும். இது வீட்டுக் கடன், கார் கடன் (Car Loan) போல் அல்லாமல் உங்கள் வருமானம், சிபிஎல் ஸ்கோர் (CIBIL Score) மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறனை அடிப்படையாக வைத்து தான் வழங்கப்படும். திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி செலவுகள், திருமணம், வீடு பழுது பார்ப்பது போன்ற அவசர தேவைகளுக்கு பெர்சனல் லோன் வாங்கப்படுகிறது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த பெர்சனல் லோன் அவசர காலகட்டங்களில் கைகொடுக்கிறது. இதில் நமது சொத்துக்களை அடகு வைக்க தேவையில்லை. ஆவணங்கள் சரியாக இருந்தால் சில மணி நேரங்களிலேயே கடன் கிடைக்கும். மாதத் தவணை கட்டும் வசதி ஆகியவை இதன் நன்மைகள்.

ஆனால் இதில் மற்ற கடன்களைக் காட்டிலும் வட்டி அதிகமாக இருக்கும். சரியான காலகட்டத்தில் திருப்பி செலுத்த முடியாமல் போனால் சிபில் ஸ்கோர் பாதிப்பு, கூடுதல் கட்டணங்கள் ஆகியவை இதில் உள்ள பிரச்னைகளாக பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களில் மட்டுமே பெர்சனல் லோன் பெறுவது நல்லது.

பெர்சனல் லோன் வாங்கும் முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

மேலும் பெர்சனல் லோன் வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். முதலில் எதற்காக கடன் பெறுகிறோம் என்பது மிகவும் முக்கியம். தேவைக்கு ஏற்ப நாம் கடன் தொகையை நிர்ணயித்துக்கொள்வது முக்கியம். தேவைக்கு அதிகமாக எடுத்தால் பின்னால் நமக்கு அது பெரும் சுமையாக மாறக்கூடும்.

அனைத்து பொதுத்துறை வங்கிகள், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் வட்டி விகிதத்தை ஒப்பிடுவது நல்லது. தவறுதலாக அதிக வட்டி வசூலிக்கும் ஒரு நிறுவனத்தில் இருந்து கடன் பெற்றால் அதிக மாதத் தவணை செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் மாத வருமானத்தில் அதிகபட்சமாக 30 சதவகிதத்துக்கும் மேல் மாதத் தவனை செலுத்த வேண்டியிருக்கும் திட்டத்தை தவிர்ப்பது நல்லது. அப்படி அதிக மாதத் தவனை திட்டத்தை தேர்ந்தெடுத்தால் அது நம் அன்றாட செலவுகளை பாதிக்க கூடும்.

சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்வது அவசியம்

லோன் எடுக்கும் முன் சிபில் ஸ்கோரை செக் பண்ணுவது அவசியம். நமது சிபில் ஸ்கோர் 750க்கும் மேல் இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. உடனடியாக கடன் கிடைக்கும். ஒருவேளை நம் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் நமது கடன் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் மிகவும் பாதுகாப்பானதும் கூட. அதனால் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளை தேர்ந்டுப்பது நல்லது. ஆனால் அங்கே பெர்சனல் லோன் பெறுவதற்கு காலதாமதம் ஆகலாம். நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கினால் உடனடியாக கடன் கிடைக்கும். ஆனால் வட்டி அதிகமாக இருக்கும். கடன் செயலிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் அவை பாதுகாப்பானதா என ஒன்றுக்கு பல முறை சோதனை செய்வது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

ஆபரேஷன் சிந்தூர்... குடியரசுத் தலைவரிடம் விளக்கிய பிரதமர் மோடி!
ஆபரேஷன் சிந்தூர்... குடியரசுத் தலைவரிடம் விளக்கிய பிரதமர் மோடி!...
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வெயில் கொளுத்துமா?
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வெயில் கொளுத்துமா?...
ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் படத்தின் வீடியோவை வெளியிட்ட படக்குழு
ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் படத்தின் வீடியோவை வெளியிட்ட படக்குழு...
உடல் பருமன்: காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள்
உடல் பருமன்: காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள்...
வெளிநாடு பயணங்களை ரத்து செய்த பிரதமர் மோடி.. பின்னணி என்ன?
வெளிநாடு பயணங்களை ரத்து செய்த பிரதமர் மோடி.. பின்னணி என்ன?...
இந்திய ராணுவம் தாக்குதல்.. மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி
இந்திய ராணுவம் தாக்குதல்.. மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி...
ஜெயிலர் 2 படத்திற்காக மோகன்லாலை சந்தித்த நெல்சன் திலீப்குமார்?
ஜெயிலர் 2 படத்திற்காக மோகன்லாலை சந்தித்த நெல்சன் திலீப்குமார்?...
அறியாமையால் உயிரைக் கொள்ளும் பழக்கங்கள்..உங்களிடம் உள்ளதா?
அறியாமையால் உயிரைக் கொள்ளும் பழக்கங்கள்..உங்களிடம் உள்ளதா?...
பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான்.. துலாம் ராசிக்கான பலன்கள்!
பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான்.. துலாம் ராசிக்கான பலன்கள்!...
LIVE : ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி ஆலோசனை
LIVE : ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி ஆலோசனை...
பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது எப்படி? வீடியோ வெளியீடு
பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது எப்படி? வீடியோ வெளியீடு...