SIP: 20 ஆண்டுகளுக்கு ரூ.5,000 VS 10 ஆண்டுகளுக்கு ரூ.10,000 – எது சிறந்தது?
SIP Investment Comparison : சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் சிப் முதலீட்டு திட்டம் மக்களுக்கு பாதுகாப்பான திட்டமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு 5000 ரூபாயை முதலீடு செய்வதற்கும், 10 ஆண்டுகளில் 10000 ரூபாயை முதலீடு செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்வோம்.

சிஸ்டெமாடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் (SIP) என்பது தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமான முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. குறைந்த முதலீட்டில் (Investment) அதிகம் லாபம் பெற விரும்புபவர்களுக்கு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை நேரடியாக முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகின்றன. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் பணத்தேவையை நிவர்த்தி செய்ய முடியும். பொருளாதார வல்லுநர்களால் இந்த சிப் முதலீட்டு திட்டம் சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. மேலும் முதன்முறையாக முதலீடு செய்பவர்கள் தங்கள் முதலீடுகளை பங்கு சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்யவிட SIP போன்ற திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என கருதுகின்றனர்.
இதில் ஆபத்துகள் குறைவு. மேலும் மார்கெட் விவரங்களை ஒவ்வொரு நாளும் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் நமது விருப்பத்துக்கு ஏற்ப முதலீடுகளை செய்யலாம். இந்த திட்டத்தில் குறிப்பிட்ட கால அளவுக்கு ஏற்ப வளர்ச்சி வாய்ப்பை அளிக்கும். அதாவது நாம் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப குறுகிய காலத்தில் அதிக நிதி வளர்ச்சியை பெறலாம் அல்லது நீண்ட காலத்தில் நிதி வளர்ச்சியை பெறலாம். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
குறைந்த கால முதலீடு
-
SIP தொகை:மாதம் ரூ. 10,000
-
கால அளவு: 10 ஆண்டுகள்
-
10 ஆண்டுகளில் முதலீட்டு தொகை: ரூ. 12,00,000
-
லாபம்: ரூ. 10,40,359
-
நமக்கு கிடைக்கும் தொகை: ரூ. 22,40,359
நீண்ட கால முதலீடு
-
SIP தொகை: மாதம் ரூ. 5,000
-
கால அளவு: 20 ஆண்டுகள்.
-
20 ஆண்டுகளில் முதலீட்டு தொகை: ரூ. 12,00,000
-
லாபம்: ரூ. 33,99,287
-
நமக்கு கிடைக்கும் தொகை: ரூ. 45,99,287
இங்கே இரண்டு நிலைகளிலும் முதலீடு செய்யும் தொகை மற்றும் கால அளவு ஒரேபோல இருந்தாலும், 20 ஆண்டுகளுக்கு 5,000 ரூபாயை SIP திட்டத்தில் முதலீடு செய்யும் போது கிடைக்கும் லாபமானது, 10,000 ரூபாயை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதை விட அதிகமாக உள்ளது. முதலீட்டு காலம் அதிகரிக்கும்போது லாபமும் அதிகரிக்கிறது.
ஏன் நீண்ட கால SIP சிறந்தது?
மாதம் ரூ. 5000 ரூபாயை 20 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்து கிடைக்கும் லாபமானது , மாதம் 10,000 ரூபாயை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து கிடைக்கும் லாபத்தை விட 3 மடங்கு அதிகமாக கிடைக்கிறது. இது சரியான முறையில் கம்பவுண்டிங் செயல்படும் தன்மை மற்றும் குறுகிய காலத்தில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை நமக்கு காட்டுகிறது. எனவே, நீண்ட காலத்தில் குறுகிய தொகையை SIP திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
SIP என்ற முதலீட்டு திட்டம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற விரும்புபவர்களுக்கு ஏற்றதாக பார்க்கப்படுகிறது. இதில் முதலீட்டுக் காலம் அதிகமாக தோன்றினாலும் அதன் மூலம் கிடைக்கும் லாபமும் அதிகமாக இருக்கும்.