Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை – தற்காத்துக்கொள்வது எப்படி?

Heatwave triggers asthma risk : கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக ஆஸ்துமா நோயாளிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம். ஆஸ்துமா நோயாளிகள் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை – தற்காத்துக்கொள்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 06 May 2025 21:27 PM

மற்ற நேரங்களை விட கோடைகலாங்களில் (Summer) ஆஸ்துமாவால் (Asthma) பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கோடைகலாங்களில் ஆஸ்துமா உள்ள நபர்கள் அதிக பாதிப்பை சந்திக்கிறார்கள். கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கம் மட்டும் அல்லாமல், காற்றில் உள்ள மாசுபாடு,  தூசி ஆகியவையும் சேர்ந்து ஆஸ்துமா நோயாளிகளுக்கு மோசமான சூழ்நிலை உருவாக்குகிறது. இந்த கட்டுரையில், வெப்ப அலையின் போது ஏற்படும் ஆஸ்துமா பிரச்னைகள், அதன் அறிகுறிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான முன்னெச்சரிக்கைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

வெப்பம் ஏன் ஆஸ்துமாவை மோசமாக்குகிறது?

கோடைகாலங்களில் குறிப்பாக வெப்ப அலையின் போது காற்றின் தரம் மோசமாகி, ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், சூடான காற்று மூச்சுக் குழாய்கள் வழியாக சென்று நுரையீரலை பாதிக்கும். இதனால் திடீர் திடீர் மூச்சுத் திணறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெப்பத்தால் உடலில் நீர் குறைந்து அது நுரையீரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

தடுக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகள்

  • மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்

  • வீட்டில் குளிர்ச்சியான சூழலை உருவாக்குங்கள். மிதமான வெப்ப நிலையில் ஏசி அல்லது, ஃபேனை பயன்படுத்துங்கள். இதனால் மூச்சு திணறல் ஏற்படுவது குறையும்.

  • தினமும் போதுமான நீர் குடிக்க வேண்டும். தாகமாக இல்லையெனினும் குடிப்பது நல்லது.

  • காற்றின் தரக் குறியீட்டை கவனித்து அதற்கு ஏற்ப நடந்துகொள்ளுங்கள். இதற்காக SAFAR, AQI India போன்ற ஆப்களைப் பயன்படுத்துங்கள்.

  • ஆஸ்துமா மருத்துவர்களிடம் கலந்தாலோசித்துக்கொள்ளுங்கள். அவசர சிகிச்சை மருந்துகளும் உங்கள் அருகில் இருக்கட்டும்.

  • வெளியே செல்லும்போது மாஸ்க் பயன்படுத்துக்கங்கள். மாஸ்க் இல்லாத பட்சத்தில் கைகுட்டையை பயன்படுத்தி காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளுங்கள்.

  • அவ்வப்போது வீட்டில் இருந்தபடி உடற்பயிற்சி செய்யுங்கள்

  • வீட்டில் அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை தவிர்க்க வேண்டும். வீட்டில் அடிக்கடி தூசிகளை சுத்தம் செய்யுங்கள்.

  • உங்கள் குடும்பத்தினர் எமெர்ஜென்சி நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள வேண்டும்

முடிவில்:
கோடைகாலத்தில் தோன்றும் வெப்ப அலை ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதற்கு சரியான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். தினசரி மேற்சொன்ன படி பாதுகாப்பாக இருப்பதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மருத்துவரின் ஆலோசனையின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்குவது மட்டுமே ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

வயிறு உப்புசத்தால் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா?
வயிறு உப்புசத்தால் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா?...
திருமணம் நின்றுபோனதற்குக் காரணம் இதுதான்.. நடிகை த்ரிஷா !
திருமணம் நின்றுபோனதற்குக் காரணம் இதுதான்.. நடிகை த்ரிஷா !...
Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?
Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?...
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!...
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா...
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !...
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!...
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்...
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!...
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!...
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!...