Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Retro : வசூலில் ரூ.100 கோடியைக் கடந்த சூர்யாவின் ‘ரெட்ரோ’.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி

Retros collection in one week : நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜின் கூட்டணியில் வெளியாகி திரையரங்குகளில் சம்பவம் செய்துவரும் படம் ரெட்ரோ. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே முன்னணி நாயகியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி 5 நாட்களான நிலையில், இதுவரை உலகளாவிய கலெக்ஷனில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Retro : வசூலில் ரூ.100 கோடியைக் கடந்த சூர்யாவின் ‘ரெட்ரோ’.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி
சூர்யாImage Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 06 May 2025 22:08 PM

நடிகர் சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பில் கடந்த 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியான படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் சூர்யா முன்னணி நடிகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hgede) நடித்திருந்தார். சொல்லப்போனால் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் ஜோடி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டைமென்ட் (2D Entertainment) நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோவிற்கு முன் வெளியான படங்கள்  வரவேற்பைப் பெறாமல் தோல்விடையைந்தது. அந்த தோல்வியைத் தவிர்க்கும் வண்ணத்தில் இந்த படத்தில் நடிகர் சூர்யா தனது முழு திறமையையும் ரெட்ரோவில்  காட்டியிருந்தார் என்றே கூறலாம்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தில்  ஒவ்வொரு பாடல்களையும் சிறப்பாகச் செதுக்கியிருக்கிறார். சூர்யாவின் ரெட்ரோ வெளியாகி சுமார் 5 நாட்களைக் கடந்த நிலையில், உலகளாவிய வசூல் குறித்துப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படமானது இதுவரை சுமார் ரூ. 104 கோடியை வசூல் செய்துள்ளது. இதைக் கொண்டாடும் விதத்தில் படக்குழு பதிவை வெளியிட்டுள்ளது.

ரெட்ரோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படமானது முதல் நாளிலே சுமார் ரூ. 46 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படித்திருந்தது. இதுவரை சூர்யாவின் நடிப்பில் வெளியான படங்களைவிட முதல் நாளிலே அதிகம் வசூல் செய்த படமாக ரெட்ரோ அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதைப் போல நடிகை பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தது.

மேலும் நடிகை பூஜா ஹெக்டேவும் இதுவரை நடித்த தமிழ்ப் படங்களை விடவும் இந்த படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்த்திருக்கிறார் என்று கூறலாம். ருக்மினி என்ற ரோலில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் நடிகர் சூர்யாவும் எதிர்பார்த்ததை விடமும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் சூர்யா 45, சூர்யா 46 மற்றும் வாடிவாசல் என அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா 45 படமானது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் தமிழில் ஜல்லிக்கட்டு கதைக்களம் கொண்ட வாடிவாசல் படத்திலும் வெற்றிமாறனின் கூட்டணியில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?
Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?...
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!...
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா...
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !...
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!...
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்...
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!...
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!...
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!...
பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட்.. சூர்யாவின் 'ரெட்ரோ' வசூல் எவ்வளவு?
பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட்.. சூர்யாவின் 'ரெட்ரோ' வசூல் எவ்வளவு?...
SIP : 20 ஆண்டுகளுக்கு ரூ.5,000 - 10 ஆண்டுகளுக்கு ரூ.10,000?
SIP : 20 ஆண்டுகளுக்கு ரூ.5,000 - 10 ஆண்டுகளுக்கு ரூ.10,000?...