Soori : ஒரே படத்தில் ஹீரோ மற்றும் வில்லனா? நடிகர் சூரியின் புதிய படத்தின் அப்டேட்!
Mandaadi Movie Update : கோலிவுட் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நுழைந்து, முன்னணி கதாநாயகனாக படங்களில் நடித்து வருபவர் சூரி. இவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் கடல் சார்ந்த மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகிவரும் படம் மண்டாடி. இந்த படத்தில் நடிகர் சூரி நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரியின் (Soori) நடிப்பில் இறுதியாக வெளியான படம் விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2). இந்த படத்தைப் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கியிருந்தார். இந்த படத்தின் முதல் பாகத்தின் மூலம் கதாநாயாகனாக அறிமுகமான சூரி, இரண்டாவது பாகத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த படமானது முதல் பாகம் அளவுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுக்காவிட்டாலும், அவரது கதாப்பாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் (Maaman) என்ற படத்தில் கதாநாயகனாக இணைந்தார். இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இந்த படமானது வரும் 2025, மே 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து சூரி ஆக்ஷ்ன் ஹீரோவாக நடித்து வரும் படம் மண்டாடி (Mandadi).
இந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி (Madhimaran Pugazhenthi) இயக்கி வருகிறார். இந்த படமானது கடல் சார்ந்த ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறதாம். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூரி நடிக்கும் கதாபாத்திரம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி தமிழில் ஹீரோவாகவும் மற்றும் தெலுங்கில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகிச் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இதை அடுத்தாக தெலுங்கிலும் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அந்த போஸ்டரில் தெலுங்கு பிரபல நடிகர் சுஹாஸின் தோற்றம் க்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதன் காரணமாகத் தமிழில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சூரி, தெலுங்கில் வில்லன் ரோலில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் இந்நக தகவல் தினத்தந்தி செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவு :
All it needs is a Tsumani to wake your fighting spirits up 💥
Here’s the Terrific Telugu First Look of the film #Mandaadi 🔥@sooriofficial & @ActorSuhas are all set to Ride & Rule the Sea ⛵@elredkumar @rsinfotainment #VetriMaaran @MathiMaaran @gvprakash @Mahima_Nambiar… pic.twitter.com/hdVJ1BElwk
— RS Infotainment (@rsinfotainment) May 5, 2025
நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் நடிகை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்து வருகிறார். இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் இந்த படத்தை ஆ.ஏ. இன்போ என்ற நிறுவனத்தின் கீழ் எல்ரட் குமார் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
நடிகர் சூரியின் நடிப்பில் விடுதலை பார்ட் 1&2, கருடன் மற்றும் மாமன் படத்தை தொடர்ந்து இந்த மண்டாடி படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மண்டாடி படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதியில் அல்லது வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.