Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Coolie : இன்னும்100 நாட்களில் திரையரங்கில்.. ரஜினியின் கூலி படக்குழு வெளியிட்ட வீடியோ!

Coolie In 100 Days : கோலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார்தான் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகியுள்ள 171வது திரைப்படம் கூலி. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படமானது ரிலீசிற்கு தயாராகியுள்ள நிலையில், இன்னும் 100 நாட்களில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Coolie : இன்னும்100 நாட்களில் திரையரங்கில்.. ரஜினியின் கூலி படக்குழு வெளியிட்ட வீடியோ!
ரஜினிகாந்த்
barath-murugan
Barath Murugan | Published: 06 May 2025 18:52 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  (Lokesh Kanagaraj) என்றால் தமிழ் சினிமாவில் தெரியாத நபர்களே இருக்க முடியாது. மாநகரம் (Maanagaram)படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், நடிகர் கார்த்தியின் கைதி (Kaithi) படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். தொடர்ந்து விஜய், கமல் என முன்னணி நடிகர்களை வைத்தது படங்களை இயக்கியுள்ளார். இந்த வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் கூலி (Coolie). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கத்தை விட முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ளார். கூலி படத்தில் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் இறுதியில் நிறைவடைந்தது.

மேலும் அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி பெரும் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கூலி படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் வெறும் 100 நாட்கள் மட்டும் உள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாகக் கதாபாத்திரம் அறிமுகம் போல ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளது. தற்போது இந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் ரஜினிகாந்தின் இந்த படத்தில் பான் இந்திய திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். குறிப்பாக இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். நடிகர் ரஜினியின் மகளாகக் கூலி படத்தினில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இவர் பல வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஜூனியர் எம்ஜிஆர் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த கூலி படமானது நிச்சயம் வசூலை வாரிக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நிச்சயமாக இவரின் இசையமைப்பில் இந்த படமானது சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?
Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?...
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!...
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா...
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !...
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!...
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்...
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!...
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!...
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!...
பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட்.. சூர்யாவின் 'ரெட்ரோ' வசூல் எவ்வளவு?
பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட்.. சூர்யாவின் 'ரெட்ரோ' வசூல் எவ்வளவு?...
SIP : 20 ஆண்டுகளுக்கு ரூ.5,000 - 10 ஆண்டுகளுக்கு ரூ.10,000?
SIP : 20 ஆண்டுகளுக்கு ரூ.5,000 - 10 ஆண்டுகளுக்கு ரூ.10,000?...