Ration Card : மே 31-க்குள் இதை செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்.. ஏன் தெரியுமா?
Ration Card Deadline for Biometric Verification | தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான குடும்பங்கள் ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றன. ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வருமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றனர்.

மாதிரி புகைப்படம்
இந்திய குடிமக்களுக்கு ரேஷன் கார்டு (Ration Card) ஒரு மிக முக்கிய ஆவணமாகவும், வாழ்வாதாரமாகவும் உள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டு இல்லை என்றால் அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்களை பெற முடியாமல் போய்விடும். இந்த நிலையில், தான் ரேஷன் கார்டு குறித்து தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மே 31, 2025-க்குள் ரேஷன் கார்டில் இந்த ஒரு விஷயத்தை செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏழை பொதுமக்களுக்கு வாழ்வளிக்கும் ரேஷன் கார்டு திட்டம்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதாவது, ரேஷன் அட்டை மூலம் வருமை கோட்டின் கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாதவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
ரேஷன் அட்டை – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
முன்னதாக ரேஷன் கார்டுகள் காகிதத்தால் ஆண புத்தக வடிவில் இருந்த நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றை பயன்படுத்தி தான் ரேஷன் கார்டில் சேவைகளை செய்ய முடியும். குறிப்பாக ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் கைரேகை பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் பொருட்கள் வழங்கப்படாது.
ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம் – ஏன் தெரியுமா?
ரேஷன் கார்டு சேவைகளை பெற கை ரேகை பதிவு மிக முக்கிய பங்கு வங்கிக்கும் நிலையில், பலரும் தங்களது ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். இதன் காரணமாக அவர்களது பெயர்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மே 31, 2025-க்குள் ரேஷன் அட்டையில் கைரேகை பதிவு செய்யவில்லை என்றால் குறிப்பிட்ட நபரின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒருவேளை குடும்ப உறுப்பினர்கள் யாருமே ரேஷன் கார்டில் கைரேகை பதிவை இணைக்கவில்லை என்றால் ரேஷன் கார்டே ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.