இன்னும் பொங்கல் பரிசு வாங்கலையா?.. மீண்டும் ஒரு சான்ஸ்.. இன்னைக்கே ரேஷன் கடைக்கு போங்க!
Pongal Gift Distribution Resumes Today | தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசை பெறாதவர்களுக்கு அரசு மேலும் ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்கள் பொங்கல் சிறப்பு பரிசை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜனவரி 19 : தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு (Pongal Festival) பொதுமக்களுக்கு, பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் பணம் வழங்கும் நடைமுறையை கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூ.3,000 பணத்தை அறிவித்தது. அதற்காக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசுத் தொகையை பலர் வாங்காமல் இருந்துள்ளனர். அவர்களுக்கான இனிப்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசை வாங்காமல் உள்ள பொதுமக்கள்
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என அரசு விரைந்து செயல்பட்டது. டோக்கன்களின் அடிப்படையில் ஜனவரி 08, 2026 முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், வெளியூர்களில் இருந்த பொதுமக்கள் சிலர் பொங்கல் தொகுப்பு மற்றும் சிறப்பு பரிசுத் தொகையை வாங்காமல் இருந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு அரசு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : பொங்கல் பண்டிகை எதிரொலி : சென்னை கடற்கரைகளில் 233 மெட்ரிக் கழிவுகள் அகற்றம் – மாநகராட்சி தகவல்
இன்று முதல் மீண்டும் சிறப்பு தொகுப்பு, பணத்தை பெற்றுக்கொள்ளலாம்
பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை, பொங்கல் விடுமுறை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் பரிசு பெறாதவர்கள் இன்று (ஜனவரி 19, 2026) மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் சிறப்புத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது.
இதையும் படிங்க : உயர்நிலை மாணவர்களால் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கூட படிக்க முடியவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
எனவே ரேஷன் அட்டை தாரர்கள் தங்களது ரேஷன் கார்டு எந்த முகவரியில் உள்ளதோ அங்கு சென்று அரிசு, சர்க்கரை அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பையும், ரூ.3,000 சிறப்பு பரிசுத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.