PM Kisan : பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?.. வெளியான முக்கிய தகவல்!

PM Kisan Samman Nidhi Yojana 20th Installment | பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கி கணக்கில் அரசு ரூ.2,000 பணம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகள் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணையை எதிர்ப்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

PM Kisan : பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?.. வெளியான முக்கிய தகவல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

26 Jun 2025 10:51 AM

பொதுமக்களின் நலனுக்காக அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முற்றிலும் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் பிஎம் கிசாம் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana). முழுக்க முழுக்க விவசாயிகளின் நலனுக்கான இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும். இந்த திட்டத்தில் இதுவரை விவசாயிகளுக்கு 19 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விவசாயிகளுக்கு சிறப்பு பலன்களை வழங்கும் பிஎம் கிசாம் சம்மன் நிதி யோஜனா

இந்தியாவில் நலிவுற்று நிலையில் இருக்கும் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டம் தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா. இந்த திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆராயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த 6 ஆயிரம் ரூபாய் பணம் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, விவசாயிகளின் வங்கி கணக்கில் பிஎம் கிசான் பணம் வரவு வைக்கப்படுகிறது.

19வது தவணையை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி

பிஎம் கிசான் 20வது தவணை எப்போது? – காத்திருக்கும் விவசாயிகள்

பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் 19 தவணை பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணை பணம் எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகளின் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. பிஎம் கிசான் 17வது தவணை 2024 ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2024 அக்டோபர் மாதத்தில் 18வது தவணை விடுவிக்கப்பட்டது. சமீபத்தில் 2025, பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 19வது தவணையை வெளியிட்டார். 19வது தவணை வெளியிடப்பட்டு 4 மாதங்கள் ஆகும் நிலையில், 2025 ஜூ மாத இறுதிக்குள் 20வது தவணை வழங்கப்படும் என தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.