ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? நீங்கள் செய்ய வேண்டியவை
State Bank Of India : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.2.5 லட்சம் வரை பெர்சனல் லோனை எளிமையான முறையில் ஆன்லைனிலும், வங்கி கிளையிலும் விண்ணப்பித்து பெறலாம். வட்டி விகிதம், கடனை செலுத்துவதற்கான கால அளவு, எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் பண தேவைக்கு இருப்பவர்களுக்கு பெர்சனல் லோன் (Personal Loan) தீர்வாக இருந்து வருகிறது. ஆனால் உடனடி கடன் கிடைக்குமா? பாதுகாப்பானவையா? என்பது போன்ற பல குழப்பங்கள் மக்களிடையே நீடித்து வருகின்றன. இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank Of India) தற்போது ரூ.35 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதில் ரூ.2.5 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ள விரும்புவோர் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். மேலும் கடந்த மே 16 , 2025 அன்று வங்கியில் அறிவிக்கப்பட்ட தகவலின் படி இந்த கடனுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10.30 சதவிகிதம் முதல் அதிகபட்சம் 15.30 சதவகிதிம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாதத் தவணை மற்றும் கால அவகாசம்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகபட்ச கடன் தொகையான ரூ.35 லட்சம் பெற விரும்புகிறீர்கள் என்றால் அந்த கடனை திரும்பி செலுத்துவதற்கான கால அவகாசம் அதிகபட்சமாக 7 ஆண்டுகளாகும். மேலும் விண்ணப் கட்டணம் அதிகபட்சம் 1.5 சதவிகிதம் செலுத்த வேண்டியிருக்கும். ஜிஎஸ்டியுடன் சேர்த்து இந்த கட்டணம் வசூலிக்கப்படும். விண்ணப்ப கட்டணம் சிலருக்கு அவரது தகுதிக்கு ஏற்ப விலக்கு அளிக்கப்படும்.
கடனுக்கு விண்ணப்பிக்கும் வழிகள்:
YONO App
ஸ்டேடட் பேங்க ஆப் இந்தியாவின் செயலியான YONO மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் யோனோ செயலியை பயன்படுத்த வேண்டும். உங்கள் பெர்சனல் விவரங்களை குறிப்பிட்டு லாகின் செய்ய வேண்டும். பின்னர் அந்த செயலியில் Personal Loan என்பதை தேர்வு செய்து உங்களுக்கு தேவையான கடன் தொகை, கால அளவு ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் உங்கள் தகவலை உறுதிப்படுத்த ஓடிபி கேட்கும். அந்த தகவல்கள் அனைத்தைும் பதிவு செய்த பிறகு உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். உங்கள் விண்ணப்பங்கள் சரிபார்த்த பிறகு உங்களது வங்கிக் கணக்கில் கடன் தொகை செலுத்தப்படும்.
ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள், YONO அல்லது இணைய வங்கிங் மூலமாக வேகமாக விண்ணப்பிக்கலாம்.
ஆஃப்லைனில் விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நேரடியாக அருகிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்கு சென்று, மேனேஜரிடம் சென்று நீங்கள் கடன் பெறவிரும்பும் தொகை, கடன் செலுத்துவதற்கான கால அளவு ஆகியவற்றை விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கடன் தொகைக்கான தகுதியை அவர் கூறுவார். பின்னர் அவரிடம் விண்ணப்பப் படிவம் பெற்று, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உங்களுக்கு கடன் தொகை அளிக்கப்படும்.
கடன் பெற தகுதிகள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடன் பெற குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.15,000 ஆக இருக்க வேண்டும். மேலும் கடந்த ஓராண்டுகளாக தொடர்ச்சியாக பணியில் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் எளிமையான ஆவணங்களை பூர்த்தி செய்து பயன் பெறலாம்.
கடன் பெற சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்
-
அடையாள ஆவணம்: பான் கார்டு, ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ்
-
முகவரி ஆவணம்: மின் கட்டண ரசீது, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு
-
வருமான ஆவணம்: சமீபத்திய சம்பள விரங்கள் அடங்கிய பே ஸ்லிப் (Pay Slip), Form 16, வங்கிக் கணக்கு விவரங்கள்
முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியவை
வட்டி விகிதம் மற்றும் கடன் நிபந்தனைகள் விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர், வருமானம், கடந்த காலத்தில் கடன் பெற்றிருந்தால் அவற்றை திருப்பி செலுத்திய விவரம், கடன் தொகை, கால அவகாசம் போன்றவற்றைப் பொருத்தே தீர்மானிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு SBI அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கிளையை தொடர்பு கொள்ளலாம்.