தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய நிலவரம்!!

Gold Price: சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழலில் நிலவும் சில முக்கிய மாற்றங்களே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் உலகளாவிய முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய நிலவரம்!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

15 Apr 2026 10:19 AM

 IST

Gold Price Today: தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் விலை அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ₹800 உயர்ந்துள்ளது. விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பதால், இனி தங்கம் வாங்குவது என்பது சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகி விடுமோ என்ற கவலை எழுந்துள்ளது. முதலீட்டாளர்கள் தரப்பிலோ, தங்கம் விலையேற்றம் இன்னும் சில காலத்திற்குத் தொடரக்கூடும் என்றே கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஒரே ஆண்டில் 36% லாபம்.. 2025 அட்சய திருதியையில் தங்கம் வாங்கியவர்களுக்கு இவ்வளவு லாபமா?

தங்கம் விலை உயர்வு:

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 160 உயர்ந்து ஒரு கிராம் 14,220க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 1,13,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 100 உயர்ந்து ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 உயர்ந்து ஒரு சவரன் 1,14,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வு:

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 10 உயர்ந்து கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2,75,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

விலை உயர்வுக்கு காரணம் என்ன?

சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழலில் நிலவும் சில முக்கிய மாற்றங்களே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் உலகளாவிய முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய காலக்கட்டங்களில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை விட, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்கிறது.

பண்டிகை காலம்:

தற்போது சித்திரை மாதம் என்பதால் தமிழகத்தில் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. மேலும் தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களால் சில்லறை வர்த்தகத்தில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதும் இந்த விலை உயர்வுக்கு ஒரு கூடுதல் காரணமாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உங்கள் உறவுகளின் ஜிபே கணக்கில் நீங்கள் பணம் செலவு செய்யலாம்.. அசத்தலாக அறிமுகமான பாக்கெட் மணி அம்சம்!

அமெரிக்க டாலர் மற்றும் வட்டி விகிதங்கள்:

அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவ்வாறு வட்டி விகிதங்கள் குறையும் போது, அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து தங்கத்தின் தேவை அதிகரிக்கும். இது உலகச் சந்தையில் தங்கத்தின் விலையை நேரடியாக உயர்த்துகிறது.

Follow Us
மீண்டும் போருக்கு தயாராகும் இஸ்ரேல் - பரபரப்பு தகவல்
ரயில் மூலம் கடத்தப்பட்ட 163 சிறுவர்கள்... துரிதமாக செயல்பட்டு மீட்கப்பட்ட சம்பவம்..
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!