வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம்.. ரூ. 84,000 கடந்து விற்பனை.. அதிர்ச்சியில் மக்கள்..
Gold Price Hike: செப்டம்பர் 22, 2025 அன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 83,440 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 23, 2025 தேதியான இன்று, ஒரு கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 84,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
சென்னை, செப்டம்பர் 23, 2025: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தங்கம் வாங்க வேண்டும் என்றாலே மக்களுக்கு மலைப்பாக உள்ளது. தினசரி புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே வரும் தங்க விலை, இன்று மேலும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 84,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. செப்டம்பர் 22, 2025 அன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 83,440 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 23, 2025 தேதியான இன்று, ஒரு கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 84,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
உயரும் தங்கம் விலை.. என்ன காரணம்?
தங்கம் என்பது நமது கலாச்சாரத்தில் குழந்தை பிறப்பு முதல் திருமணம் வரை அனைத்து விசேஷங்களிலும் தவிர்க்க முடியாத முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தங்கத்துடன், வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அதிர்ச்சி.. இனி இந்த தேவைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாது.. ஆர்பிஐ முக்கிய உத்தரவு!
உலக வங்கியில் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பதே விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், வரவிருக்கும் 2025 அக்டோபர் மாதத்திற்குள் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1.5 லட்சம் வரை எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எட்டாக்கனியாய் மாறிய தங்கம்:
இந்நிலையில், செப்டம்பர் 23, 2025 இன்று,
24 கேரட் தங்கம் – ஒரு கிராம்: ரூ. 11,454, ஒரு சவரன்: ரூ.91,632
22 கேரட் தங்கம் – ஒரு கிராம்: ரூ. 10,500, ஒரு சவரன்: ரூ. 84,000 என விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 2024 ஆம் ஆண்டு தங்க விலை சுமார் ரூ. 59,000 மட்டுமே இருந்தது. ஆனால் பின்னர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் ரூ. 21,000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பால் முதல் நெய் வரை… ஜிஎஸ்டி வரி குறைப்பு – ஆவின் பால் பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு
இன்று ஒரே நாளில் தங்க விலை, ஒரு கிராமுக்கு ரூ. 140, ஒரு சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். தங்க விலை ஒரு பக்கம் இருக்க, வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி – ரூ. 149, ஒரு கிலோ வெள்ளி – ரூ. 1,49,000 என விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று மட்டும் ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. மொத்தத்தில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சுமார் ரூ. 2,000 அதிகரித்துள்ளது.