Gold Price : ஒரே நாளில் ரூ.1,120 சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Dropped 1120 Rupees Per Sovereign | ஈரான் போருக்கு மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை ரூ.1,120 சரிவை சந்தித்துள்ளது.

Gold Price : ஒரே நாளில் ரூ.1,120 சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 Apr 2026 10:30 AM

 IST

சென்னை, ஏப்ரல் 06 : ஈரான் போருக்கு (Iran War) மத்தியில் தங்கம் விலை (Gold Price), மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 06, 2026) அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.140 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி

பிப்ரவரி 28, 2026 முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மிக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பல்வேறு சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டு வருகின்றன. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்க தொடங்கிய நிலையில், தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : அரசின் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!

கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
28 மார்ச் 2026 ரூ.13,660 ரூ.1,09,280
29 மார்ச் 2026 ரூ.13,660 ரூ.1,09,280
30 மார்ச் 2026 ரூ.13,770 ரூ.1,10,160
31 மார்ச் 2026 ரூ.13,670 ரூ.1,09,360
01 ஏப்ரல் 2026 ரூ.14,050 ரூ.1,12,400
02 ஏப்ரல் 2026 ரூ.13,750 ரூ.1,10,000
03 ஏப்ரல் 2026 ரூ.13,850 ரூ.1,10,800
04 ஏப்ரல் 2026 ரூ.13,950 ரூ.1,11,600
05 ஏப்ரல் 2026 ரூ.13,950 ரூ.1,11,600
06 ஏப்ரல் 2026 ரூ.13,810 ரூ.1,10,480

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.13,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும்போது இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. கூடுதல் லாபம் பெறலாம்!

ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை மிக கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் பக்கம் திரும்பியுள்ளது. போர் சூழலுக்கு ஏற்ப முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது, தங்கத்தை விற்பனை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தங்கம் இத்தகைய ஏற்ற, இறக்கங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்