மீண்டும் மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.81,000-த்தை தாண்டியது!
Gold Price Crossed 81,000 Rupees | கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை ஒரு சவரன் ரூ.80,000-த்தை கடந்த நிலையில், தற்போது ரூ.81,000-த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.10,150-க்கும், ஒரு சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
சென்னை, செப்டம்பர் 09 : தங்கம் விலை (Gold Price) செப்டம்பர் 06, 2025 அன்று வரலாறு காணாத உச்சத்தை கண்டு ஒரு கிராம் ரூ.10,000-க்கும், ஒரு சவரன் ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த அபார விலை உயர்வின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பொதுமக்கள் வெளியே வராத நிலையில், மீண்டும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது, இன்று (செப்டம்பர் 09, 2025) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கும், ஒரு சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குறுகிய காலத்தில் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்த தங்கம்
உலக அளவில் மிக குறுகிய காலத்தில் தங்கம் மிக கடுமையான விலை உயர்வை அடைந்துள்ளது. குறிப்பாக 2025 ஆண்டு தொடங்கியது முதகே தங்கம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் தங்கம் 30 சதவீதம் வரை உயர்ந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் அந்த அளவை தாண்டும் வகையில் தங்கம் விலை வேகவேகமாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை இதே வேகத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்தால் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : Gold Price : இன்னும் 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எவ்வளவாக இருக்கும்?.. நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!
6 நாட்களில் ரூ.3,000 உயர்ந்த தங்கம் விலை
- செப்டம்பர் 04, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,795-க்கும், ஒரு சவரன் ரூ.78,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 05, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும், ஒரு சவரன் ரூ.78,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 06, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கும், ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 07, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கும், ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 08, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.10,060-க்கும், ஒரு சவரன் ரூ.80,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 09, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும், ஒரு சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : UPI New Limit : யுபிஐ-ல் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. இந்த வரம்புகள் எல்லாம் மாறுது!
இன்றைய தங்கம் விலை
நேற்று (செப்டம்பர் 08, 2025) 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,060-க்கும் ஒரு சவரன் ரூ.80,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 09, 2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கும், ஒரு சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.