மீண்டும் ரூ.93,000-த்தை தாண்டிய தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
Gold Price Again Crossed 93,000 Rupees | தங்கம் கடந்த சில நாட்களாக ரூ.93,000-க்குள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.93,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்துள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, நவம்பர் 22 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக ரூ.93,000-க்குள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (நவம்பர் 22, 2025) ரூ.93,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.11,630-க்கும், ஒரு சவரன் ரூ.93,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் உச்சத்தில் இருந்து சரிவை சந்தித்த தங்கம்
2025, அக்டோபர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை கடும் உச்சத்தில் இருந்தது. அதிகபட்சமாக அக்டோபர் 21, 2025 அன்று தங்கம் விலை ரூ.97,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. அதாவது அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.12,180-க்கும், ஒரு சவரன் ரூ.97,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் என்ற சூழல் உருவானது. ஆனால், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அக்டோபர் 22, 2025 அன்று தங்கம் சர்வதேச சந்தையில் கடும் சரிவை சந்தித்தது. அதாவது அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் 6.3 சதவீதம் சரிவை சந்தித்தது.
இதையும் படிங்க : திருமண பரிசு பொருட்களுக்கு வரி விதிக்கப்படுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மீண்டும் ரூ.93,000-த்தை தாண்டிய தங்கம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 13 நவம்பர் 2025 | ரூ.11,900 | ரூ.95,200 |
| 14 நவம்பர் 2025 | ரூ.11,740 | ரூ.93,920 |
| 15 நவம்பர் 2025 | ரூ.11,550 | ரூ.92,400 |
| 16 நவம்பர் 2025 | ரூ.11,550 | ரூ.92,400 |
| 17 நவம்பர் 2025 | ரூ.11,540 | ரூ.92,320 |
| 18 நவம்பர் 2025 | ரூ.11,400 | ரூ.91,200 |
| 19 நவம்பர் 2025 | ரூ.11,600 | ரூ.92,800 |
| 20 நவம்பர் 2025 | ரூ.11,500 | ரூ.92,000 |
| 21 நவம்பர் 2025 | ரூ.11,460 | ரூ.91,680 |
| 22 நவம்பர் 2025 | ரூ.11,630 | ரூ.93,040 |
இதையும் படிங்க : உங்கள் UAN எண்ணுடன் தவறான மெம்பர் ஐடி இணைக்கப்பட்டுள்ளதா?.. சுலபமா Delink செய்யலாம்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
இன்று (நவம்பர் 22, 2025) ஒரு கிராம் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.172-க்கும், ஒரு கிலோ ரூ.1,72,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.