EPFO : இபிஎஃப்ஓ இருப்பை சுலபமாக தெரிந்துக்கொள்ள சில வழிகள்.. முழு விவரம் இதோ!
Check EPFO PF Balance with Easy Steps | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பயனர்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ள சில எளிய அம்சங்களை வழங்குகிறது. அவை என்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் நலனை காப்பதில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சம் ஊழியர்களின் நலனுக்காக அவர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து பிஎஃப் கணக்கில் மாதம் மாதம் வரவு வைக்கும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்களது தேவைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்க அனுமதி வழங்குகிறது.
அதாவது திருமணம், கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக பணம் எடுக்க முடியும். ஒருவேளை பணத்தை எடுக்கவில்லை என்றால் அந்த பணத்தை ஓய்வூதியமாக எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி பணத்தை நீண்ட நாட்கள் எடுக்கவில்லை என்றால் அது கூடுதல் பலன்களை வழங்குகிறது. அதாவது, நீண்ட நாட்கள் பிஎஃப் பணத்தை எடுக்காமல் இருப்பதன் மூலம் அதற்கான வட்டி வழங்கப்படும். இதன் மூலம் கூடுதல் தொகையை பெற முடியும்.
பிஎஃப் தொகையை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம் – சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ
பிஎஃப் தொகையின் இருப்பை தெரிந்துக்கொள்ள பல வழிகள் உள்ளன. அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி இணையதளம், செயலி உள்ளிட்டவை மூலம் தெரிந்துக்கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் சற்று நேரம் எடுக்க கூடியவை. ஆனால், மிக சுலபமாக பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ள சில வழிகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மிஸ்டு கால் மூலம் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொகையை மிஸ்டு கால் மூலம் மிக எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.
- அதாவது இபிஎஃப்ஓவில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண் மூலம் 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
- இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்த பிறகு மொபைல் எண்ணுக்கு பிஎஃப் இருப்பு குறித்த மொத்த தகவல்களும் அனுப்பி வைக்கப்படும்.
குறுஞ்செய்தி மூலம் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொகையை குறுஞ்செய்தி மூலம் மிக எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.
- அதற்கு இபிஎஃப்ஓவில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண் மூலம் 7738299899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
- அதாவது, EPFOHO UAN என டைப் செய்து அனுப்ப வேண்டும்.
- இதன் மூலம் மிக எளிதாக பிஎஃப் இருப்பு குறித்த தகவல்கள் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகள் மூலம் மிக எளிதாக பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.