பட்ஜெட்டை தொடர்ந்து கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை!
Share Market Crashed After Union Budget 2026 | 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. பட்ஜெட் காரணமாக விடுமுறை தினமான இன்று பங்குச்சந்தைகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில், கடும் சரிவை சந்தித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
மும்பை, பிப்ரவரி 01 : 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் (2026 – 2027 Union Budget) இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது மும்பை பங்குச்சந்தை குறையீடு சுமார் 1,926 புள்ளிகள் சரிந்துள்ள நிலையில், தேசிய பங்குச்சந்தை குறியீடு 600 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்ததை தொடர்ந்து பங்குச்சந்தை சரிந்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஞாயிற்று கிழமையில் செயல்பட்ட பங்குச்சந்தை
வழக்கமாக வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறைகளின் போது பங்குச்சந்தைக்கும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால், இன்று (பிப்ரவரி 01, 2026) 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு விடுமுறை என்றாலும் பங்குச்சந்தை திறக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொடங்கிய நிலையில், பட்ஜெட் முடிவதற்குள்ளாக இந்திய பங்குச்சந்தை மிக கடுமையான சரிவை சந்தித்தது.
கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை
இன்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கிய நிலையில், கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது மும்பை பங்குச்சந்தை குறையீடு சுமார் 1,926 புள்ளிகள் சரிந்துள்ள நிலையில், தேசிய பங்குச்சந்தை குறியீடு 600 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. இவ்வாறு இந்திய பங்குச்சந்தை மிகா கடுமையான சரிவை சந்தித்த நிலையில், முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்தை எதிர்க்கொண்டுள்ளனர்.