தமிழக பாரம்பரியத்தை போற்றும் பட்டுச் சேலை.. 2026 பட்ஜெட்டில் கவனம் ஈர்த்த நிர்மலா சீதாராமன் உடை!

Nirmala Sitharaman Kanchipuram Silk Saree | 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் அணிந்து வந்துள்ள சேலை இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

தமிழக பாரம்பரியத்தை போற்றும் பட்டுச் சேலை.. 2026 பட்ஜெட்டில் கவனம் ஈர்த்த நிர்மலா சீதாராமன் உடை!

குடியரசு தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Updated On: 

01 Feb 2026 10:57 AM

 IST

புதுடெல்லி, பிப்ரவரி 01 : 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் (2026 – 2027 Union Budget) இன்று (பிப்ரவரி 01, 2026) தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சாமானிய மக்கள் முதல் தொழில்நுட்பம், வணிகம் என பல்வேறு துறைகளும் இந்த பட்ஜெட்டுக்கு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காலை சரியாக 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்தவ்யா பவனுக்கு வருகை புரிந்துள்ளார். இந்த நிலையில், அவர் அணிந்துள்ள சேலை இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

9வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றது முதலே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 01, 2026 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஞாயிற்று கிழமை என்றாலும் கூட இன்று (பிப்ரவரி 01, 2026) 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9வது மத்திய பட்ஜெட்டாக இது உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு தயாராக உள்ள நிலையில், நிதியமைச்சர் தனது குழுவுடன் கர்தவ்யா பவனுக்கு வருகை புரிந்துள்ளார்.

இதையும் படிங்க : மகாராஷ்டிராவின் அடுத்த துணை முதலமைச்சர்.. இன்று பதவி ஏற்கிறார் அஜித் பவார் மனைவி சுனேத்ரா?

கவனம் பெறும் நிர்மலா சீதாராமன் சேலை

ஒவ்வொரு பட்ஜெட்டுக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பாரம்பரியத்தை போற்றும் வகையில் சேலை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் காரணமாக ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் அவர் அணிந்து வரும் சேலை கவனம் பெறும். அந்த வகையில், இந்த பட்ஜெட்டுக்கும் அவர் அணிந்துள்ள சேலை கவனம் பெற்றுள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு அவர் தமிழகத்தின் மிகவும் பாரம்பரியமான கைத்தரி நெசவை பெருமைப்படுத்தும் வகையில், கைத்தரி நெசவு செய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலையை அணிந்து வந்துள்ளார். பர்பிள் நிறத்தில் உள்ள அந்த சேலையில் காஃபி பிரவுன் நிற பாடர் மற்றும் தங்க நிற கட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் யார் தலைமை பொறுப்பை ஏற்பார்?
அஜித் பவாரின் விமான விபத்துக்கு முன் விமானி அனுப்பிய குட் மார்னிஹ் மெசேஜ் - நெகிழ்ச்சி சம்பவம்
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் - இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி
இந்த ஜப்பானின் கருப்பு முட்டையை சாப்பிட்டால் ஆயுள் 7 ஆண்டுகள் அதிகரிக்குமா?