Atal Pension Yojana : வெறும் ரூ.210 முதலீடு செய்தால் போது.. மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்.. அசத்தல் திட்டம்!

Atal Pension Yojana Investment and Benefits | பொதுமக்களின் நலனுக்காக அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதால் அடல் பென்ஷன் யோஜனா. இதில் முதலீடு செய்யும் நிலையில், சிறந்த பலன்களை பெறலாம். இந்த நிலையில், அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Atal Pension Yojana : வெறும் ரூ.210 முதலீடு செய்தால் போது.. மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்.. அசத்தல் திட்டம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

22 May 2025 00:32 AM

இந்தியாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு (Government Employees) பல வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் ஓய்வூதிய திட்டம். இந்தியாவில் பணியாற்றும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்கள் 60 வயதை தாண்டும் போது அரசு ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால் தனியார் ஊழியர்களுக்கு இத்தகைய சிறப்பு அம்சங்கள் எதுவும் கிடைக்காத. இந்த நிலையில், அரசு துறை சாரா பணியாளர்களுக்கு பயனளிக்கும் வகையிலும், முதுமை காலத்தில் அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் நோக்கிலும் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா (APY – Atal Pension Yojana) திட்டம். இந்த நிலையில், இந்த திட்டத்தில் வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?

2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா. இந்த திட்டம் தனி நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் பணியில் இருக்கும்போதே முதலீடு செய்ய தொடங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஓய்வு பெற்ற பிறகு, அதாவது 60 வயதை தாண்டும்போது மாதம் மாதம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

அரசின் இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும் நபர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். எனவே தகுதியானவர்கள் அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் மிக இலவசமாக முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் தனியார் துறையில் பணியாற்றும் நபர்கள் மட்டுமன்றி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் நபர்களும் முதலீடு செய்யலாம். தனிநபர் என்ற அடிப்படையிலே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், தகுதியானவர்களுக்கு முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம்

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒருவர் எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்கிறாரோ, எவ்வளவு தொகை முதலீடு செய்கிறாரோ அதன் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஒருவர் மாதம் மாதம் ரூ.210 முதலீடு செய்கிறார் என்றால் 60 வயதுக்கு பிறகு அவருக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியமாக கிடைக்கும். ஆனால், ரூ.5,000 மாத ஓய்வூதியம் பெற விரும்பும் நபர்கள் தங்களது 18 வயதில் இருந்தே மாதம் மாதம் ரூ.210 முதலீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.