Aadhaar : ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்கலாம்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Aadhaar Card Mobile Number Linking | ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ள நிலையில், அதில் உள்ள சில தகவல்களும் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஆதார் கார்டில் பெயர், முகவரி உள்ளிட்டவை போலவே மொபைல் எண்ணும் முக்கியமாகும். இந்த நிலையில், ஒரே மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் இணைக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) ஆதார் அட்டையை (Aadhaar Card) வழங்குகிறது. இந்த ஆதார் அட்டை 12 இலக்க எண்களை கொண்டது. அதார் அட்டையில் 12 இலக்க எண் மட்டுமன்றி பெயர், முகவரி, வயது, பாலினம், கை ரேகை, கண் ரேகை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த ஆதார் அட்டை ஒருவர் இந்திய குடிமகன் தான் என்பதை உறுதி செய்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு தேவைகளுக்காக ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
ஆதார் கார்டில் மொபைல் எண் இணைப்பது ஏன் அவசியம்?
ஆதார் கார்டில் இடம்பெற்றுள்ள பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை தவிர ஆதாரில் மொபைல் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆதார் தொடர்பான சேவைகளை செய்து முடிக்க, ஆதார் கார்டை வேறு யாறேனும் பயன்படுத்தாமல் தடுக்க மொபைல் எண் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், ஒரு மொபைல் எண்ணில் ஒரு ஆதார் கார்டை மட்டும் தான் இணைக்க முடியுமா என பலருக்கும் சந்தேகம் எழுகிறது. இந்த நிலையில், ஒரு மொபைல் எண்ணில் ஒரு ஆதார் கார்டை மட்டும்தான் இணைக்க முடியுமா, ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகளை ஒரே மொபைல் எண்ணில் இணைக்க முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு மொபைல் எண்ணில் ஒரு ஆதார் கார்டை மட்டும்தான் இணைக்க முடியுமா?
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிகளின்படி, ஒரு மொபைல் எண்ணில் பல ஆதார் கார்டுகளை இணைக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
- ஆதார் கார்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே மொபைல் எண்ணில் ஆதார் கார்டுகளை இணைத்துக்கொள்ளலாம்.
- உதாரணமாக அப்பா அல்லது அம்மாவின் மொபைல் எண்ணில் பிள்ளைகள் தங்களது ஆதார் கார்டுகளை இணைத்துக்கொள்ளலாம்.
- இதேபோல குடும்ப உறுப்பினர்கள் யாருடைய மொபைல் எண்ணில் வேண்டுமானாலும் அந்த குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதார் கார்டுகளை இணைத்துக்கொள்ளலாம்.
- மொபைல் எண்ணில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நண்பர்கள் உள்ளிட்ட யாருடை ஆதார் கார்டுகளையும் இணைக்க அனுமதி இல்லை.
மேற்குறிப்பிட்ட இந்த விதிகளை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் ஒரே மொபைல் எண்ணில் பல ஆதார் கார்டுகளை இணைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.