Bank Holiday : அக்டோபரில் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!

Bank Holidays in October 2025 | ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை உள்ளிட்ட காரணங்கள் காரணமாக சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Bank Holiday : அக்டோபரில் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

27 Sep 2025 11:47 AM

 IST

ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை, உள்ளூர் விடுமுறை, பண்டிகைகள் உள்ளிட்ட காரணங்களால் வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) அளிக்கப்படும். 2025, செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, வங்கி விடுமுறையின் போது வங்கி சேவைகளை பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

  • அக்டோபர் 1, 2025 – மகாநவமியை முன்னிட்டு பெரும்பாலான பகுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 02, 2025 – காந்தி ஜெயந்தி என்பதால் அன்று இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 03, 2025 – துர்கா பூஜை என்பதால் சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 04, 2025 – துர்கா பூஜை என்பதால் சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 05, 2025 – ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 06, 2025 – லட்சு பூஜை என்பதால் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 07, 2025 – வால்மீகி ஜெயந்தி என்பதால் ஒருசில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 10, 2025 – கர்வா செளத் முன்னிட்டு ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 11, 2025 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 12, 2025 – ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 18, 2025 – கதி பிஹூ பண்டிகை காரணமாக அசாமில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 19, 2025 – ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 20, 2025 – தீபாவளி பண்டிகை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 21, 2025 – கோவர்தன் பூஜை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 22, 2025 – பலிபத்யமி என்பதால் சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 23, 2025 – லட்சுமி பூஜை என்பதால் பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 25, 2025 – நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 26, 2025 – ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 27, 2025 – சத் பூஜை என்பதால் அன்றைய தினம் மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 28, 2025 – சத் பூஜை என்பதால் அன்றைய தினம் மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 31, 2025 – சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தியை முன்னிட்டு குஜராத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு.. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

2025, அக்டோபர் மாதத்தில் மட்டும் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.