எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளிய லாரி எலிசன்.. உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார்!
Larry Ellison Overtakes Elon Musk | இதுவரை உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பட்டத்தை மஸ்க் தன் வசம் வைத்து வந்த நிலையில், அதனை லாரி எலிசன் தட்டி பறித்துள்ளார். அதன்படி உலகின் நம்பர் 1 பணக்காரராக எலிசன் மாறியுள்ளார்.

லாரி எலிசன் மற்றும் எலான் மஸ்க்
வாஷிங்டன், செப்டம்பர் 12 : ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் (Larry Ellison) உலகின் நம்பர் 1 பணக்காரராக (World’s No 1 Billionaire) முன்னேறியுள்ளார். இதுவரை டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்த நிலையில், எலிசன் அவரை முறியடித்துள்ளார். எலிசனின் சொத்து மதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அவர் எலான் மக்ஸ்கை முந்தியுள்ளார். இந்த நிலை எலான் மஸ்கை லாரி எலிசன் முந்தியது எப்படி, அவரின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகின் நம்பர் 1 பணக்காரராக முன்னேறிய லாரி எலிசன்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு உரிமையாளர் தான் எலான் மஸ்க். உலக அளவில் அதிக சொத்துக்களை கொண்டிருந்த நிலையில், இதுவரை உலக பணக்காரராக எலான் மக்ஸ் இருந்து வந்தார். ஆனால், தற்போது உலக பணக்காரர் என்ற பட்டத்தை எலான் மக்ஸ்கிடம் இருந்து லாரி எலிசன் தட்டி பறித்துள்ளார். அதனபடி, உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பட்டத்தை அவர் தன்சவமாக்கியுள்ளார்.
இதையும் படிங்க : Nepal Protest : நேபாளத்தில் வெடித்த ஜென் Z போராட்டம்.. நிதியமைச்சரை துரத்தி துரத்தி அடித்த போராட்டக்காரர்கள்!
யார் இந்த லாரி எலிசன்?
81 வயதாகும் லாரி எலிசனின் தற்போதைய சொத்து மதிப்பு 393 மில்லியன் டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம் கோடி ஆகும். அதன்படி, இவர் 384 மில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டு உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பட்டத்தை தக்கவைத்து வந்த எலான் மஸ்கை முந்தியுள்ளார். இந்த நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் எலிசன் முதல் இடத்தை பிடித்துள்ள நிலையில், மஸ்க் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதேபோல மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜூக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் இடிபாடுகளில் சிக்கிய பெண்கள் மீட்கப்படவில்லை?.. அதிர்ச்சியூட்டும் காரணம்!
41 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ள லாரி எலிசன்
அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் இந்த ஆரக்கிள் நிறுவனம். லாரி எலிசன் இதன் இணை நிறுவனராக உள்ளார். தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் அதிகரித்துள்ளதால் எலிசனின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவர் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதாவது உலக அளவில் எலிசன் 41 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.